இலங்கையின் கடன்மறுசீரமைப்புச் செயன்முறை விரைவில் பூர்த்திசெய்யப்படும் - அமெரிக்கத் திறைசேரி செயலாளர் நம்பிக்கை

Published By: Digital Desk 3

17 Jul, 2023 | 04:50 PM
image

(நா.தனுஜா)

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் துரிதப்படுத்தப்பட்டு, அவை விரைவில் பூர்த்திசெய்யப்படுமென அமெரிக்கத் திறைசேரியின் செயலாளர் ஜனெற் யெலென் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்களின் கூட்டம் திங்கட்கிழமை (17)  இந்தியாவில் நடைபெற்றது. அதற்கு முன்பதாகக் கருத்து வெளியிட்ட அமெரிக்கத் திறைசேரியின் செயலாளர் ஜனெற் யெலென், இம்முறை நடைபெறும் நிதியமைச்சர்களுக்கான கூட்டத்தின்போது போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனுக்கான நிதியுதவி வழங்கலை அதிகாரிக்குமாறும், கடன்மறுசீரமைப்புச் செயன்முறையைத் துரிதப்படுத்துமாறும் வலியுறுத்தவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கானா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான கடன்மறுசீரமைப்பு குறித்துக் கலந்துரையாடப்பட்டு, அவை விரைவில் பூர்த்திசெய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் கானா ஆகிய நாடுகள் கடந்த ஆண்டு அவற்றின் வெளிநாட்டுக்கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டன. அதுமாத்திரமன்றி அண்மைக்காலமாக உலகளாவிய ரீதியில் குறைந்த வருமானம் பெறும் நாடுகளில் அரைப்பங்கானவை தீவிர கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதுடன், அதன்விளைவாக அவற்றின் நீண்டகால இயங்குகை மற்றும் அபிவிருத்தி இயலுமை என்பன பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நாடுகளின் கடன்மறுசீரமைப்பு மற்றும் ஏனைய பூகோள சவால்கள் என்பன உள்ளடங்கலாக பரஸ்பர அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பில் சீனாவுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் ஜனெற் யெலென் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டைனமைட் கற்களை ஏற்றிச் சென்ற பாரஊர்தி...

2025-03-27 11:35:38
news-image

பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் திடீரென...

2025-03-27 11:26:19
news-image

மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு...

2025-03-27 11:23:40
news-image

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக குருணாகலுக்கு பீடி...

2025-03-27 11:23:14
news-image

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் தாய்நாட்டில்...

2025-03-27 11:03:55
news-image

அம்பாறை ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள...

2025-03-27 11:03:31
news-image

கிரிஷ் கட்டிட வழக்கு விசாரணைகளிலிருந்து விலகுகிறேன்...

2025-03-27 10:55:22
news-image

நாட்டில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்...

2025-03-27 10:46:51
news-image

முச்சக்கர வண்டிகளை செலுத்தும் வெளிநாட்டவர்களால் வீதி...

2025-03-27 10:33:06
news-image

தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர்...

2025-03-27 10:42:31
news-image

சுமார் 25 அடி பள்ளத்தில் விழுந்து...

2025-03-27 10:22:33
news-image

பள்ளத்தில் விழுந்து பாரஊர்தி விபத்து ;...

2025-03-27 10:08:40