பல்கலைக்கழங்களின் 14ஆவது விளையாட்டுப் போட்டி மட்டக்களப்பில் : ஜனாதிபதி மற்றும் பிரதமரும் பங்கேற்பர்

Published By: Vishnu

17 Jul, 2023 | 04:47 PM
image

2023ஆம் ஆண்டிற்கான இலங்கையின் அரச பல்கலைக்கழங்களின் 14ஆவது விளையாட்டுப் போட்டி நிகழ்வானது இம்முறை இலங்கையின் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் தலைமையின் கீழ் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அந்தவகையில் இதனை வெளிப்படுத்தும் முகமாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இலங்கை கிழக்குப் பல்கலைக் கழகத்தில ஊடக சந்திப்பொன்று வெள்ளிக்கிமை (14.07.2023) அப்பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த ஊடக சந்திப்பில் இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த, 2023ஆம் ஆண்டிற்கான இலங்கையின் அரச பல்கலைக் கழங்களின் 14ஆவது விளையாட்டுப் போட்டிற்கான தலைவரும் உபவேந்தருமான பேராசிரியர் வ.கனகசிங்கம், பிரதி உபவேந்தர் பேராசிரியர்.

கே.இ.கருணாகரன், இலங்கை பல்கலைக்கழக விளையாட்டு சங்கத்தின் தலைவரும் 2023ஆம் ஆண்டிற்கான இலங்கையின் அரச பல்கலைக்கழங்களின் 14ஆவது விளையாட்டுப் போட்டிற்கான உபதலைவருமான பேராசிரியர் என். ராஜேஸ்வரன், பல்கலைக்கழக பதிவாளர் ஏ.பகிரதன் மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான இலங்கையின் அரச பல்கலைக்கழங்களின் 14ஆவது விளையாட்டுப் போட்டிற்கான செயலாளரும் ஏற்பாட்டுக்குழு பொறுப்பாளரும் மற்றும் பல்கலைக்ககத்தின் உடற்கல்விப் பிரிவின் இயக்குனருமான எஸ். திபாகரன் ஆகியோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.  

இதன்போது ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்த உபவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம், அவர்கள், இலங்கையின் அரச பல்கலைக்கழங்களின் 14ஆவது விளையாட்டுப் போட்டியினை பெருமையோடு தலைமை தாங்கி நடாத்திக் கொண்டிருக்கும் உன்னத வாய்பபுக் குறித்து இலங்கையின் கிழக்குப் பல்கலைக் கழகமானது பெருமை கொள்கின்றது.

இது தமது சமூகத்தின் வளர்ச்சிக்கும் நாடளாவியரீதியில் விளையாட்டுத்துறையை வளர்ப்பதற்கும் மற்றும் அமைதியான சமூதாயத்தை நாட்டில் உருவாக்குவதற்கும் வழிகோலும்.

மனித கௌரவத்தைப் பாதுகாப்பதில் அக்கறையுள்ள ஒரு அமைதியான சமூகத்தை மேம்படுத்தும் நோக்கில், இலங்கைப் பல்கலைக்கழகங்களின் இணக்கமான வளர்ச்சிச் சேவையில் விளையாட்டு மற்றும் உடற்கல்வியை மேம்படுத்துவதே இவ்விளையாட்டுப் போட்டின் முக்கிய இலக்காக காணப்படுகின்றது.

இவ் விளையாட்டுப் போட்டியானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் வரும் இலங்கையின் 16 அரச பல்கலைக்கழகங்களை உள்ளடக்கியதாகும். இப்போட்டித் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 40 நிகழ்வுகள் உட்பட 24 விளையாட்டுகளில் 6,000 இற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பார்கள்.

மேலும் இவ்விளையாட்டுப் போட்டியின் முக்கிய திகதிகள் பற்றிய அறிவிப்பினையும் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தனர். அந்தவகையில் விளையாட்டு நிகழ்வின் தொடக்க விழா செப்ரம்பர் முதலாம் திகதி இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெறும், செப்ரம்பர் 8ஆம் திகதி நடைபெறும் நிறைவு விழாவில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து கொள்வார்.

இவ்விழாவில் மேலும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் டினேஸ் குணவர்த்தன, கல்வி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி. சுசில் பிரேமஜெயந்த, உயர் கல்வி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி. சுரேந்திர ராகவன், கல்வி அமைச்சின் செயலாளர் எம். நிகால் ரனசிங்க, இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் இலங்கை அரச பல்கலைக்கழகங்களின் 16 உபவேந்தர்கள் உட்பட அனைவரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் என கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம், மேலும் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று சோண்டர்ஸ் - யங் சில்வர்,...

2024-03-03 09:40:12
news-image

107ஆவது பொன் அணிகளின் சமர் :...

2024-03-03 09:38:44
news-image

யூபி வொரியர்ஸிடம் வீழ்ந்த குஜராத் ஜயன்ட்ஸின்...

2024-03-02 14:30:01
news-image

விக்டரி - குறே கழகங்களுக்கு இடையிலான...

2024-03-02 14:01:12
news-image

குசல் பெரேராவுக்குப் பதில் நிரோஷன் திக்வெல்ல

2024-03-01 22:47:20
news-image

ரசிகர்களை கோபமூட்டிய ரொனால்டோவுக்கு ஒரு போட்டித்தடை,...

2024-03-01 17:22:29
news-image

ஆஸி. வீரர் க்றீன் ஆட்டம் இழக்காமல்...

2024-03-01 16:18:07
news-image

டெல்ஹியின் வெற்றியில் கெப், ஜொனாசன், ஷஃபாலி...

2024-03-01 15:05:04
news-image

ஒலிம்பிக் விழாவுக்கான பாதுகாப்பு திட்டங்களைக் கொண்ட...

2024-02-29 20:04:27
news-image

பங்களாதேஷுடனான தொடர்களில் திறமையை வெளிபடுத்த முடியும்...

2024-02-29 14:55:53
news-image

பங்களாதேஷுடனான முதல் இரண்டு ரி20 போட்டிகளில்...

2024-02-28 23:55:46
news-image

பொதுநலவாய செஸ் போட்டியில் இலங்கைக்கு ஒரு...

2024-02-28 21:19:17