பணத்தை வரவழைப்பதற்கான எளிய பரிகாரங்கள்...!

Published By: Ponmalar

17 Jul, 2023 | 12:20 PM
image

ஐயா! பணக்கஷ்டம் எமக்கு இருக்கிறது. நீங்கள் விவரித்தது போல் பணத்தை வரவழைப்பதற்கான பல பரிகாரங்களை மேற்கொண்டோம்.

ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு கிட்டவில்லை. கடன் கடன் கடன் என எந்த திசை திரும்பினாலும் கடனாளியாகவே இருக்கிறேன்.

'தன பிராப்தி என்பது இல்லை' என்று எம்முடைய ஜோதிட நிபுணர் ஒருவர் தெரிவித்துவிட்டார். இந்நிலையில் பணம் வருவதற்காக நான் என்ன செய்ய வேண்டும்? என சிலர் மனதில் கேள்வியாக கேட்க நினைப்பர்.

எம்மில் சிலர் அவர்களிடத்தில் தேவையான அளவிற்கு தன வரவு இருந்தாலும்... கூடுதலாக கிடைக்க வேண்டும் என்ற பேராசையில் சில பரிகாரங்களை எம்மிடம் கேட்பதுண்டு.

லௌகீக வாழ்க்கையில் இருக்கும் அனைவருக்கும் அனைத்து தருணத்திலும் பணம் என்பது வேண்டும். ஏனெனில் எல்லா சிக்கல்களுக்கும் தீர்வை நோக்கி முன்னேறுவதற்கு முதன்மையான தேவை பணம்.

அதனால் பணம் வைத்திருப்பவர்களும்... பணமே இல்லாதவர்களும்... பணத்தைப் பற்றிய தேடலை தொடர்ச்சியாக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கும் உதவும் வகையிலான சில எளிய பரிகாரங்களை எம்முடைய ஆன்மீக பெரியோர்கள் எடுத்துரைத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை இப்போது நாம் காண்போம்.

சிலருக்கு திசா புத்தி கரணம் நாம யோகம் என பலவும் சாதகமாக இருந்தும் அவர்களின் எண்ணங்கள் இதற்கு எதிர் நிலையாக இருப்பதால், அவர்களுக்கு பண வரவு என்பது இருக்காது. இதனை ஆன்மீகத்தில் உள்ளவர்கள் தரித்திரம் என்று விளக்கமளிப்பதுண்டு.

அதாவது ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் மனம் போன போக்கில் வாழ்க்கையை வாழ்பவர்களிடத்தில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தனலட்சுமி தாங்க மாட்டாள். அத்துடன் மீண்டும் அந்த வீட்டுக்கு வருவதற்கும் விரும்ப மாட்டாள். இதைத்தான் தரித்திரம் என்றும், இவர்களுக்குத்தான் 'தன பிராப்தி இல்லை' என்றும் சொல்வதுண்டு. இவர்கள் பசுவின் கோமியத்தை நாளாந்தம் அல்லது வாரம் ஒரு முறையாவது சிறிதளவு சேகரித்து எடுத்து வந்து குளிக்கும் நீரில் கலந்து நீராட வேண்டும். அதன் பிறகு அதனை இல்லம் முழுவதும் குறிப்பாக வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் இதனை தெளிக்க வேண்டும். தொடர்ந்து 45 நாட்கள் விடாமல் செய்து வந்தால்... உங்களிடமிருந்து கோபித்துக் கொண்டு வெளியே சென்ற தனலட்சுமி இரக்கம் காட்டி மீண்டும் வருவார். அருள்தருவார். பணவரவு உண்டாகத் தொடங்கும்.

உங்களுக்கு சோதிட நிபுணர்கள் நண்பர்களாக இருந்தால்.. அவர்களிடத்தில் சொல்லி வைத்துவிடுங்கள். எவர் ஒருவருக்கு ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றாம் இடத்தில் சுக்கிரன் நீச்சமோ பகையின்றியோ இருக்கிறார் என்றால்.. அவரை கண்டறிந்து.. அவரின் கையால் சுக்கிர ஓரையில் சிறிதளவு பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள். அன்றிலிருந்து உங்களுக்கு சுக்கிர திசை தான். பணவரவு வருவது நிற்காமல் தொடரும். அத்தகைய நபர்களை கண்டறிவது கடினம் என்பதால் சோதிட நிபுணர்களிடம் சொல்லி வைத்து உதவ சொல்லலாம் என்றேன்.

அபிஜித் நட்சத்திரம் எனப்படும் காலகட்டத்தில், அதாவது நண்பகல் 12 மணியளவில் பாலின சிறுபான்மையினரான திருநங்கைகளுக்கு ( ஒருவர் அல்லது பலர்) திருப்தியாக மதிய உணவு அளித்து, அவர்களது கையிலிருந்து நீங்கள் பணத்தை பெற்றுக் கொண்டால்.., உங்களிடம் பணவரவு அதிகரிப்பதுடன், அந்த பணம் உங்களிடமே நிலைத்திருக்கும்.

நீங்கள் இறை நம்பிக்கை கொண்டு ஒவ்வொரு இந்து திருவிழாவையும் வெகு விமர்சையாக கொண்டாடுபவர் என்றால்... வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் மொச்சை சுண்டலை மகாலட்சுமிக்கு நைவேத்தியமாக வைத்து, பூஜை செய்து, அதனை உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்... குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் பணப்புழக்கம் அதிகரிக்கும். நட்பு வட்டம் பெரிதாகும். அவர்கள் ஊடாக பண வரவு வந்து கொண்டே இருக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் அருகில் உள்ள பெருமாள் கோவிலில் இருக்கும் தாயாருக்கு அபிஷேகம் செய்வதற்காக பசும்பாலை வழங்க வேண்டும். மேலும் அம்பாள் அணிவதற்கூ பச்சை வண்ணத்தில் வளையலை வாங்கி தர வேண்டும். இதனை செய்தாலும் பணம் தடையின்றி வரத் தொடங்கும்.

வேறு சிலர் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் பசும்பாலை வில்வ மரத்திற்கு ஊற்றி வர வேண்டும். தொடர்ந்து 24 வாரங்கள் தவறாமல் வெள்ளிக்கிழமைகளில் இதனை செய்து வந்தால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய... ஆனால் சூட்சுமரீதியாக தடைபட்டுள்ள தன வரவு வெள்ளம் போல் திடீரென்று வரத் தொடங்கும்.

எம்முடைய குடும்ப உறுப்பினர்களின் பெண்மணிகள் அவர்களது இடது கையிலுள்ள சுண்டு விரலில் வெள்ளியில்லாலான மோதிரத்தை அணிய தொடங்கினாலும்... தன வரவு அதிகரிக்கும்.

நாளாந்தம் இரவு நேரத்தில் முழு பாசிப்பருப்பை வெல்லம் கலந்த நீரில் ஊற வைத்து விட வேண்டும். அதனை மறுநாள் காலையில் பறவைகளுக்கும், பசுவிற்கும் அளித்திட வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வரும் போது எதிரிகளால் மறைமுகமாக தடை ஏற்படுத்தப்பட்டிருக்கும் உங்கள் பணவரவில் மீதான மாயத்தடை உடைந்து பணம் வர தொடங்கும்.

இவை எல்லாவற்றையும் விட உங்களிடம் தன வரவு ஏற்படும் காலகட்டத்தில் நாளாந்தம் உங்களின் வருவாய் எந்த அளவிற்கு இருக்கிறதோ.. அதில் மூன்று சதவீதத்தினை மட்டும் தனியாக பிரித்து வைத்து, ஏதேனும் ஆலயத்தில் மேற்கொள்ளப்படும் ஆன்மீக பணிகளுக்காகவோ அல்லது அங்கு மேற்கொள்ளப்படும் அன்னதானத்திற்காகவோ உங்களுடைய பங்களிப்பு என  நன்கொடையாக வழங்கி விட வேண்டும். இதனை செய்தால் உங்களுக்கு வரவேண்டிய தன வரவை யாராலும் தடுத்திட இயலாது.

தொகுப்பு சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நவகிரக தோஷங்களை நீக்கும் குளியல் பரிகாரம்..!

2024-06-20 19:53:01
news-image

நினைத்ததை நடத்திக் காட்டும் நாமாவளி பரிகாரம்..!

2024-06-19 20:20:49
news-image

வெற்றிகளை அள்ளி வழங்கும் அரச மர...

2024-06-18 17:35:24
news-image

வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலய வருடாந்த பொங்கலுக்கான...

2024-06-18 16:31:12
news-image

வெற்றியை அள்ளித்தரும் பாராயண பரிகாரம்...!

2024-06-17 20:42:41
news-image

அரசாங்க வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான எளிய...

2024-06-15 14:04:38
news-image

பண வசியத்திற்கும், மன அமைதிக்கும் இரண்டு...

2024-06-14 16:35:06
news-image

கடன் பிரச்சனை தீர்வதற்கான எளியதான பரிகாரங்கள்..!

2024-06-13 15:52:06
news-image

நினைத்ததை நடத்தி வைக்கும் ஏலக்காய் தீப...

2024-06-12 15:14:53
news-image

நோயை குணப்படுத்தும் எளிய பரிகாரம்...!?

2024-06-11 19:02:13
news-image

சர்வ அருளை வழங்கும் சரள யோகம்

2024-06-10 21:27:26
news-image

புண்ணியத்தை அருளும் ஸ்ரீ நாக யோகம்!

2024-06-08 16:47:15