பூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் இருவரில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றுமொருவர் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றார்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டமையால் சுகயீனமுற்ற நிலையில் அவர் நேற்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தங்கவேலு நிமலன் என்ற தமிழ் அரசியல் கைதியே தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பூசா தடுப்பு முகாமிலிருந்து தங்களை வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரியே இவர்கள் கடந்த 25 ஆம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

கடந்த வாரம் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரதத்தின் போது இவர்களும் உண்ணாவிரரத்தில் ஈடுபட்டிருந்ததாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.