(இராஜதுரை ஹஷான்)
நிகழ்நிலை முறைமை ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கு கடந்த மாதத்தில் மாத்திரம் 29,579 பேர் விண்ணப்பித்துள்ளனர். 5294 பேர் ஒரு நாள் சேவைக்காகவும், 24,285 பேர் சாதாரண சேவைக்காகவும் விண்ணப்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நிகழ்நிலை முறைமையில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் சேவை கடந்த மாதம் 15ஆம் திகதி மஹரகம பிரதேச செயலக பிரிவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கமைய கடந்த ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையான 15 நாட்களுக்குள் மாத்திரம் 51 பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக 29,579 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் ஏற்பட்ட சன நெரிசல், கடவுச்சீட்டு விநியோகத்தில் இடம்பெற்ற மோசடி ஆகிய காரணிகளை கருத்திற்கொண்டு கடவுச்சீட்டு விநியோக சேவையை இலகுபடுத்த பிரதேச செயலகங்கள் ஊடாக கைரேகை பதிவு மற்றும் கட்டணம் செலுத்தல் ஆகிய சேவைகள் நிர்வாக மாவட்டங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 51 பிரதேச செயலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM