கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் பேச்சு - முஜிபுர் ரஹ்மான்

Published By: Nanthini

16 Jul, 2023 | 07:04 PM
image

(எம்.மனோசித்ரா)

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ திங்கட்கிழமை (17) ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளார். 

ஜே.வி.பி. உட்பட சகல எதிர்க்கட்சிகளும் இவ்விடயத்தில் ஒரே நிலைப்பாட்டில் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலவச சுகாதார சேவை பாரியளவில் மோசமடைந்து செல்கிறது. தனியார் வைத்தியசாலைகளை கண்காணிப்பதற்கான நிறுவனமொன்று காணப்படுகின்ற போதிலும், அரச வைத்தியசாலைகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இயங்கிக்கொண்டிருக்கின்றன.

அதேபோன்று தனியார் மருந்தக மாபியாக்களின் தேவைக்கேற்ப மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபை செயற்பட்டு வருகின்றமை பாரிய அழிவாகும். 

இவர்களின் செயற்பாடுகளால் நோயாளர்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது, அது தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு கூட வாய்ப்பில்லை.

சுகாதாரத்துறையில் காணப்படும் பிரச்சினைகளை மறைப்பதற்காக குழுக்களை நியமிக்கின்றனர். குழுக்களின் ஊடாக இவற்றை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது என்பதை அமைச்சர் நினைவில் கொள்ள வேண்டும். 

இவர்களின் இந்த பொறுப்பற்ற செயற்பாடுகளால் பலரது உயிர் காவு கொள்ளப்பட்டுள்ளது.

கண் சத்திர சிகிச்சைக்காக சென்றவர்கள் பார்வையை இழந்து வீடுகளுக்கு செல்கின்றனர். இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சரும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? 

இவர்களிடம் முறையான திட்டமிடல்கள் இல்லாததன் காரணமாகவே சுகாதாரத்துறை முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி சுகாதாரத்துறைக்காக வழங்கிய 60 மில்லியன் டொலருக்கு என்ன ஆனது? 

இவ்வாறான அரசாங்கத்தை ஜனாதிபதியால் எவ்வாறு தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியும்? 

பொதுஜன பெரமுனவுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் காணப்படும் இணக்கப்பாடு காரணமாக இவை எவற்றையுமே அவர்கள் கவனத்தில் கொள்ளப்போவதில்லை.

எனவே, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை தோல்வியடையச் செய்து, மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டும். 

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்குமாறு ஏனைய எதிர்க்கட்சிகளுடன் எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாஸ நாளை  பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளார். இதனை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம். 

ஜே.வி.பி. உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் செயற்பட வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு தலா...

2024-04-21 17:10:54
news-image

தியத்தலாவ விபத்தில் ஐவர் பலி, 21...

2024-04-21 16:12:10
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச...

2024-04-21 15:59:18
news-image

உயிர்த்த ஞாயிறு படுகொலைகளிற்கு யார் காரணம்...

2024-04-21 16:08:07
news-image

நாடளாவிய ரீதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள...

2024-04-21 17:06:14
news-image

மட்டு. சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு...

2024-04-21 15:33:13
news-image

குளவி தாக்குதலுக்கு இலக்காகி ஆறு தோட்டத்தொழிலாளர்கள்...

2024-04-21 16:27:04
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளை கைது...

2024-04-21 15:05:37
news-image

சம்மாந்துறை விபத்தில் இரு மாடுகள் உயிரிழந்தன!

2024-04-21 15:38:53
news-image

சம்பள உயர்வு கோரி பெருந்திரளான தொழிலாளர்களுடன் ...

2024-04-21 14:51:39
news-image

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கான இலக்கிடப்பட்ட தீர்வு...

2024-04-21 13:47:04
news-image

இந்தியாவுடனான நேரடி நில ரீதியான இணைப்பை...

2024-04-21 13:35:30