இலங்கையின் புகழ்பெற்ற சூழலுக்கு பாதுகாப்பான சீமெந்து உற்பத்தியாளரான INSEE சீமெந்து, தொடர்ச்சியாக 8 ஆவது ஆண்டாக விலங்குகளை மீட்கும் செயற்பாட்டை சர்வதேச சூழல்சார் அமைப்பான IUCN உடன் இணைந்து அருவகல்லு கற்சுரங்கப்பகுதியில் முன்னெடுத்திருந்தது.

இலாபத்தை எய்துவதற்கு மேலதிகமாக, மக்கள் மற்றும் பூமிக்கு பெறுமதி சேர்ப்பது எனும் மும்முனை பின்பற்றல் முறைக்கமைவாக, உயிரியல் பரம்பலை பாதுகாத்து ஊக்குவிக்கும் வகையில் சூழல் பாதுகாப்புக்காக தனது பங்களிப்பை மேலும் அண்மையில் உறுதி செய்திருந்தது.

INSEE சீமெந்தின் நீடித்த அபிவிருத்தி, தொடர்பாடல் மற்றும் வெளியுறவு தொடர்புகள் பிரிவின் பணிப்பாளர் ஃபர்ஸானா கருத்து தெரிவிக்கையில்,

“தொடர்ந்து 8 ஆண்டுகளாக இந்த விலங்குகளை மீட்கும் திட்டத்தை முன்னெடுத்தமையானது பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. IUCN உடனான எமது பங்காண்மை 2009 இல் ஆரம்பித்திருந்தது” என்றார். இதுவரையில் ஹொல்சிம் மொத்தமாக 11000 இற்கும் அதிகமான மெதுவாக நகரும் விலங்குகளை புலம்பெயர்க்க உதவியுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு 2012 ஆம் ஆண்டு முதல் அதிகளவு வரவேற்பு கிடைத்திருந்தது. அதிகளவு தன்னார்வ செயற்பாட்டாளர்கள் முன்வந்திருந்ததன் மூலமாக வருடாந்தம் 2500க்கும் அதிகமான விலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன.

“இந்த சூழலுக்கு நட்புறவான கலாசாரத்தை ஏனைய செயற்பாடுகளை விட முக்கியத்துவமானதாக நாம் கருதுகிறோம். இந்த விடயத்தில் பொறுப்பு வாய்ந்த கற்சுரங்க செயற்பாடுகள் மற்றும் எமது ஊழியர்களின் பொறுப்பான செயற்பாடுகளை காணக்கூடியதாக இருந்தது” என மேலும் ஃபர்ஸானா தெரிவித்தார்.

IUCN இன் நிகழ்ச்சி ஒழுங்கிணைப்பாளர் ஷாமென் விதானகே தெரிவித்ததாவது,

“INSEE சீமெந்து உடனான பங்காண்மை என்பது அதிகளவு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். IUCN இலங்கையுடன் நீண்ட காலமாக கைகோர்த்து செயலாற்றி வரும் ஒரேயொரு தனியார் துறை நிறுவனமாக INSEE சீமெந்து திகழ்கிறது. இந்த நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கவும்ரூபவ் பங்காண்மையை தொடரவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.