பஸ்ஸும் சாரதிகளும்

Published By: Vishnu

16 Jul, 2023 | 04:58 PM
image

ஏ.எல்.நிப்றாஸ்

மன்­னம்­பிட்­டி­யவில் கடந்த வாரம் இடம்­பெற்ற கோர விபத்தை அடுத்து நாட்டில் இடம்­பெ­று­கின்ற பஸ் விபத்­துக்கள், சார­தி­களின் கவ­ன­யீனம், பஸ் உரி­மை­யா­ளர்­களின் பொறுப்­பற்ற தன்மை மற்றும் போக்­கு­வ­ரத்துச் சட்­டங்­களை இறுக்­க­மாக்க வேண்­டி­யதன் அவ­சியம் பற்­றி­யெல்லாம் வாதப் பிர­தி­வா­தங்கள் மீளவும் உரு­வெ­டுத்­தி­ருக்­கின்­றன.

ஆனால், யதார்த்­தத்­தின்­படி பார்த்தால் இன்னும் இரண்டு மூன்று வாரங்­களில் இதனை மக்­களும் அர­சாங்­கமும் மறந்து விடு­வார்கள். ஏனெனில், இதற்கு முன்­னரும் இதனைப் போன்ற பல விபத்­துக்கள் இங்கு இடம்­பெற்­றன. பல உயிர்கள் காவு கொடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அப்­போ­தெல்லாம் விபத்­துக்­களை கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என எழுந்த குரல்கள் எல்லாம் கால­வோட்­டத்தில் அடங்கிப் போயின என்­ப­துதான் நமது அனு­ப­வ­மாகும். 

கவ­ன­யீ­ன­மான, பொறுப்­பற்ற சார­திகள், போதைப் பொருள் பாவிக்கும் சார­திகள், தர­மற்ற பஸ்கள், இந்த சார­திகள் எதனைச் செய்­தாலும் பணத்தைச் வீசியெறிந்து அவர்­களை இல­கு­வாக காப்­பாற்றக் கூடிய பஸ் உரி­மை­யா­ளர்­க­ள்   , இலஞ்சம் பெறும் போக்­கு­வ­ரத்து பொலிஸார் எனப் பல கார­ணங்கள் இதன் பின்­னா­லுள்­ளன.

இது போலத்தான் நமது அர­சி­ய­லையும் நோக்க வேண்­டி­யுள்­ளது.

அதிலும் குறிப்பாக, ‘முஸ்லிம் அர­சியல்’ எனும் பய­ணத்தைப் பற்­றியும் அர­சியல் கட்­சிகள் என்ற ‘பஸ்கள்’ பற்­றியும் அவற்றின் ‘சார­தி­க­ளாக’ இருக்­கின்ற தலை­வர்கள் பற்­றியும் ‘நடத்­து­னர்­க­ளான’ எம்.பி.க்கள் பற்­றியும் பேச வேண்­டி­யி­ருக்­கின்­றது. அவர்கள் சமூ­கத்­திற்கு ஏற்­ப­டுத்­து­கின்ற இழப்­புக்­களை ஆராய்­வது காலத்தின் தேவையும் கூட.

முஸ்லிம் சமூ­க­மா­னது, பெருந்­தே­சியக் கட்­சி­களில் (இ.போ.ச பஸ்­களில்) சென்றால் நமக்­கான பாதையில் பய­ணித்து, விரும்­பிய இடத்தில் நிறுத்தி, நிர்­ண­யித்த இலக்கை அடைய முடி­யாது என்­ப­தற்­கா­கவே தனித்­துவ அடை­யாள அர­சி­யலில் (அதா­வது, தனிப்­பட்ட பய­ணிகள் வாக­னங்­களில்) முஸ்­லிம்கள் பய­ணிக்கத் தொடங்­கினர் என்­ப­துதான் அடிப்­படை வர­லாறாகும்.

முஸ்லிம் தனித்­துவ அடை­யாள அர­சியல் என்ற பய­ணத்தை ஆரம்­பித்து வைத்­தவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆவார். அதற்கு முன்பு வரை பலரும் இது­பற்றிப் பேசி­னாலும் அதனை அர­சி­யல்­ம­யப்­ப­டுத்­த­வில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் என்ற முத­லா­வது பஸ்ஸின் சார­தியும் அவ­ரா­கவே இருந்தார்.  

அந்­த­வ­கையில், முஸ்லிம் சமூ­க­மா­னது தனித்­துவ அடை­யாள அர­சியல் என்ற வழித்­த­டத்தில் பய­ணித்து, தமது எதிர்­பார்ப்­புக்­களை அடைந்து கொள்­வ­தற்­காக அஷ்­ரபின் பஸ்ஸில் நிம்­ம­தி­யாக ஏறி அமர்ந்­தது. அதற்குக் காரணம் அஷ்ரப் என்ற தகு­தி வாய்ந்த, பொறுப்­புள்ள சார­தியும் அப்­போ­தி­ருந்த நடத்­து­னர்­களும் எனலாம்.

உண்­மையில், ஒரு சார­தியில் நம்­பிக்­கை­யில்லை என்றால் அந்தப் பய­ணத்தில் எந்த பய­ணிக்கும் நிம்­மதி இருக்­காது. அஷ்­ரப்பை தலை­வ­ராகக் கொண்ட அர­சியல் பய­ணத்தில் அப்­ப­டி­யொரு நிலை முஸ்லிம் சமூ­கத்­துக்கு இருக்­க­வில்லை.

அஷ்ரப்  என்ற ஆளுமை முஸ்லிம் அர­சி­யலின் சார­தி­யாக இருந்த காலத்­தில்தான் குறிப்­பாக வடக்கு, கிழக்­கி­லுள்ள முஸ்லிம் மக்கள் அந்த பய­ணத்தை முழு­மை­யாக அனு­ப­வித்­தார்கள். அவ­ரது தலையில் முழுப் பொறுப்­பையும் கொடுத்­து­விட்டு, இடைக்­கால பாடல்­களைக் கேட்டுக் கொண்டு தமக்­கான ஆச­னங்­களில் ஆய­ாச­மாக அமர்ந்­தி­ருந்­தனர்.

எம்.எச்.எம்.அஷ்­ரபின் மர­ணத்­துக்குப் பிறகு எல்லாமே தலை கீழாக மாறிப் போனது. பஸ்கள் (கட்­சிகள்), சார­திகள் (தலை­வர்கள்) மற்றும் நடத்­து­னர்கள் (எம்.பி.க்கள்) ஆகி­யோரின் போக்கு பற்­றிய கவ­லைகள் முஸ்லிம் சமூ­கத்­திற்கு ஏற்­படத் தொடங்­கியது. தலை­வர்­களும் எம்.பி.க்களும் தள­ப­தி­களும் பொறுப்­பற்ற விதத்தில் செயற்­படத் தொடங்­கி­யதால், முஸ்லிம் சமூ­கத்தின் பயணம் இலக்கைச் சென்­ற­டை­யுமோ என்ற கவ­லை­யு­டன்தான் கடந்த கால்­நூற்­றாண்டு கழிந்­தி­ருக்­கின்­றது.

ஒவ்­வொரு பஸ்­ஸுக்கும்   புறப்­படும் இடம், சென்றடையும் இடம்  இருக்­கின்­றது. ஒரு வழித்­தடம் (ரூட்) இருக்­கின்­றது. மெது­வாகச் செல்ல வேண்­டிய இடங்கள், நிறுத்த வேண்­டிய இடங்கள் இருக்­கின்­றன. எல்­லா­வற்­றையும் விட சார­தியும் நடத்­து­னர்­களும் பய­ணிகள் விட­யத்தில் மிகப் பொறுப்­பு­டனும் எச்­ச­ரிக்­கை­யு­டனும் நடந்து கொள்ள வேண்­டி­யி­ருக்­கின்­றது.

ஒரு சாதா­ரண பஸ்­ஸிற்கே இத்­தனை நிய­திகள் இருக்­கின்­றன என்றால், ஒரு சமூ­கத்தை, தனி­யான இனக் குழு­மத்தை வழி­ந­டத்­து­கின்ற முஸ்லிம் கட்­சி­க­ளுக்கும் அதன் தலை­வர்­க­ளுக்கும் அர­சி­யல்­வா­திகளுக்கும் இதனை விடப் பன்­ம­டங்கு பொறுப்­புக்­களும் எழு­தப்­ப­டாத நிய­தி­களும் இருக்­கின்­றன என்­பதை மறந்து விடக் கூடாது.

அதனைப் பின்­பற்­றி­னால்தான் முஸ்லிம் சமூகம் பாது­காப்­பான அர­சியல் பய­ணத்தை மேற்­கொள்ள முடியும். அது­மட்­டு­மன்றி, நிர்­ண­யிக்­கப்­பட்ட இலக்கை, உரிய காலத்தில் அடைந்து கொள்­ளவும் முடியும். அதனை அஷ்ரப் ஓர­ள­வுக்குச் செய்தார்.

ஆனால், அதன்­பி­றகு முஸ்­லிம்­க­ளுக்­கான அர­சியல் என்­பது முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கான அர­சி­ய­லாக மாறி­யி­ருக்­கின்­றதா அல்­லது இலக்­கு­களை நோக்கி கணி­ச­மாக முன்­னேறி இருக்­கின்­றதா என்­பதை மீள்­வா­சிப்புச் செய்­வதன் மூலம், இந்த சார­திகள் அதா­வது முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் தமது பொறுப்பை நிறை­வேற்­றி­யுள்­ளார்­களா என்­பதை இல­கு­வாக கணிப்­பிட்டுக் கொள்ள முடியும்.

முஸ்லிம் சமூ­கத்தின் உரிமை, நலன், பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு, அர­சியல் விடிவு என்­ப­வற்றை  நோக்கி அஷ்ரப் மிகக் கவ­ன­மாகச் செலுத்­திய பஸ் வண்­டியை அவர் எதிர்­ப­ா ராத ஒரு இடத்தில் நிறுத்­தி­விட்டுச் சென்­று­விட்டார். அந்த ஆச­னத்தில் ரவூப் ஹக்கீம் ஏறி அமர்ந்தார். அவ­ரோடு வேறு சில தள­ப­தி­களும் தொற்றிக் கொண்­டனர்.

இதே­வேளை, பேரியல் அஷ்ரப், ரிஷாத் பதி­யுதீன், அதா­வுல்லா எனப் பலர் புதிய முஸ்லிம் கட்­சி­களை ஸ்தாபித்­தனர். ஹசன்­அலி, பசீர் தலை­மை­யி­லான கட்சி, அசாத் சாலியின் கட்சி என சிறு முஸ்லிம் கட்­சி­களும் உள்­ளன.

ஆனால், இத்­தனை கட்­சிகள் (அதா­வது பஸ்கள்) தனித்­துவ அடை­யாளம் என்ற வழித்­த­டத்தில் கடந்த பல வரு­டங்­க­ளாக போட்­டி­ போட்டுக் கொண்டு ஓடி­வ­ரு­கின்ற போதிலும், இலக்கை நோக்கி முன்­சென்­ற­தாக தெரி­ய­வில்லை. அப்­ப­டி­யென்றால் தாம் செய்­த­ சா­த­னை­களை அவர்கள் முன்­வைக்­கலாம்.

சில தலை­வர்கள் தமது இலக்­கு­க­ளையே மாற்றிக் கொண்­டுள்­ளனர். பணமும் பத­வியும் அவர்­க­ளது இலக்­கு­க­ளாக உள்­ளன. சில தலை­வர்கள் பெருந்­தே­சியக் கட்­சி­களின் வழித்­த­டத்தில் பய­ணிக்­கின்­றனர். இன்னும் சில முஸ்லிம் எம்.பி.க்களும் அர­சி­யல்­வா­தி­களும் தனித்­த­னி­யாக வியா­பா­ரி­களைப் போல முஸ்லிம் அர­சி­யலில் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

ஆக, மொத்­தத்தில் முஸ்லிம் அர­சியல் என்­பது கடந்த 25 வரு­டங்­களில் உண்­மை­யான இலக்­கு­களை நோக்கி குறிப்­பி­டத்­தக்க தூரம் வரை கூட முன்­னே­ற­வில்லை. அத்­துடன் பய­ணிகள், அதா­வது மக்கள் பற்­றிய எந்தக் கவ­லையும் இன்­றியே தமது அர­சியல் என்ற வாக­னத்தைச் செலுத்திக் கொண்­டி­ருக்­கின்­றனர் என்­பது கற்­ப­னை­யல்ல.

மர்ஹும் அஷ்­ரபைப் போன்று இவர்­களும் சிறந்த தலை­வர்­க­ளாக, சார­தி­க­ளாக, நடத்­து­னர்­க­ளாக இருப்­பார்கள் என்ற நம்­பிக்­கை­யில்தான் முஸ்லிம் மக்கள் இவர்­களை தலை­வர்­க­ளாக தலையில் வைத்துக் கொண்­டா­டு­கின்­றார்கள். நம்­பு­கின்­றார்கள். மீண்டும் மீண்டும் எம்.பி.க்களாக தெரிவு செய்­கின்­றார்கள்.

ஆயினும், இவர்கள் அவரைப் போல இல்லை என்­பதை பின்னர் முஸ்­லிம்கள் உணர்ந்து கொண்­டனர்.  எவ்­வா­றி­ருப்­பினும், இந்த பஸ் பாது­காப்­பற்­றது, சாரதி சரி­யில்லை என்று தெரிந்து கொண்டே அதில் ஏறு­கின்ற பய­ணி­களாக கணி­ச­மான முஸ்லிம் மக்கள் தமது தலை­வர்­களை, எம்.பி.க்களை  தட்­டிக்­கேட்க முன்­வ­ர­வில்லை என்­ப­துதான் கசப்­பான உண்­மை­யாகும். மறு­பு­றத்தில் அர­சி­யல்­வா­தி­களும் திருந்­திய மாதிரி தெரி­ய­வில்லை.

முஸ்லிம் அர­சி­யலில் மட்­டு­மன்றி, பெருந்­தே­சிய மற்றும் தமிழ்த் தேசிய அர­சி­ய­லிலும் இதுதான் யதார்த்த நிலைமை எனலாம். மஹிந்த, கோட்­டா­பய, ரணில், சஜித், அனுர, மைத்­திரி என சார­திகள் மாறி மாறி தெரிவு செய்­யப்­பட்­டாலும் நாட்டின் நாட்பட்ட பிரச்­சி­னைகள் தீர்ந்­த­பா­டில்லை. அதேபோல் தமிழ் மக்­களால் நம்­பப்­பட்ட தலை­வர்கள்  இலக்­கு­களை நோக்கி தமது வாக­னத்தை நகர்த்­தி­யி­ருந்­தா­லும் வேகம் மிகக் குறை­வே­யாகும்.

இங்கு ஒரு விட­யத்தை கவ­னிக்க வேண்டும். அதா­வது மன்­னம்­பிட்­டியில் மட்­டு­மன்றி நாட்டின் பல இடங்­களில் விபத்துக்களின் போது விபத்­துக்­குள்­ளான பஸ்­களின் சார­தி­களின் பொறுப்­பற்ற செயற்­பாடு குறித்து பல தட­வைகள் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்ட நிலை­யிலும் கூட, அதனைப் பொருட்படுத்தாமல், செயற்பட்டதாலேயே விபத்துக்கள் இடம்பெறுகின்றன என்றால், இது உண்மையில் விபத்தா அல்லது ஒரு வகையான கொலையா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

இது நாட்டின் அரசியலுக்கும் பொருந்தும். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் இலக்குகளை நோக்கி முஸ்லிம் அரசியல் தலைவர்களும் எம்.பிக்களும்  சமூகத்தை அழைத்துச் செல்லவில்லை என்றும், அவர்களது அரசியல் அணுகுமுறையால் சமூகம் பலவற்றை இழக்க நேரிடுகின்றது என்றும் தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகின்றது. 

ஆயினும், இதனையெல்லாம் கணக் கெடுக்காமல் ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்ற இறுமாப்பில்  செயற்படுகின்ற முஸ்லிம் தலைவர்கள், தளபதிகள், எம்.பிக்களுக்கும் பொறுப்பற்ற ஒரு பஸ் சாரதிக் கும் பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றதா என்பதை அரசியல்வாதிகளும் சமூகமும் சிந்திக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விஜய்யின் வெற்றி: ஈர்ப்பு, வாக்குறுதிகள் மற்றும்...

2026-05-21 11:52:11
news-image

போலி தகவல்களுக்கு எதிராக ஊடகவியலாளர்களை வலுவூட்டும்...

2026-05-20 13:17:16
news-image

தயக்கத்துக்கான காலம் முடிந்துவிட்டது : இந்திய...

2026-05-19 17:00:34
news-image

அமெரிக்க - சீன உறவுகளில் புதிய...

2026-05-19 16:54:29
news-image

17 ஆண்டுகளுக்கு பிறகும் அப்படியே இருக்கும்...

2026-05-19 16:09:46
news-image

பாக்குநீரிணை ஊடாக இந்தியாவுடனான மின் இணைப்பு...

2026-05-19 12:11:58
news-image

17 ஆண்டுகளுக்கு பிறகும் அப்படியே இருக்கும்...

2026-05-19 16:09:30
news-image

தரை­வழிப் பாலமும் தடை­களும்

2026-05-17 15:09:53
news-image

குரு­வியின் தலையில் பனங்காய்

2026-05-17 15:03:56
news-image

மாகாண அதிகாரத்துக்கு கடிவாளம்?

2026-05-17 14:55:29
news-image

இலங்­கையை மையப்­ப­டுத்­திய பனிப்போர்

2026-05-17 14:54:30
news-image

நவீன ட்ரோன் போரும் வான்புலிகளும்

2026-05-17 14:54:15