சிரியா மற்றும் ஈராக்கில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற ஐ.எஸ் அமைப்பை 30 நாட்களுக்குள் ஒட்டுமொத்தமாக அழித்து ஒழிக்கும் அதிரடி திட்டத்திற்கு ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க 45 ஆவது ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை டொனால்ட் டிரம்ப் அதிரடியாக தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

ஈராக், சிரியா, ஈரான், சூடான், லிபியா, சோமாலியா, யேமன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு விண்ணப்பிக்க 90 நாட்கள்  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, குறித்த பட்டியலில் இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் நாட்டையும் சேர்க்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சிரியா மற்றும் ஈராக்கில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற ஐ.எஸ் அமைப்பை 30 நாட்களுக்குள் ஒட்டுமொத்தமாக அழித்து ஒழிக்கும் அதிரடி திட்டத்திற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அது மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகள் ஒன்றிணைந்து புதுவகை திட்டத்தை வகுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.