விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி இன்று: ஜேகோவிச், அல்காரஸ் மோதல்

Published By: Sethu

16 Jul, 2023 | 12:49 PM
image

விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் சுற்றுப் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

லண்டன் விம்பிள்டன் நகரில் நடைபெறும் இப்போட்டியில் சேர்பியாவின் நோவாக் ஜேகோவிச்சும் ஸ்பெய்னின் கார்லோஸ் அல்காரஸும் மோதவுள்ளனர். 

நேற்றுமுன்தினம் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் டேனியல் மெத்வதேவை விகிதத்தில் 6--3, 6--3, 6--3 அல்கா ரெஸ் வென்றார் மற்றொரு அரை இறுதியில் இத்தாலியின் ஜெனிக் சின்னரை 6--3, 6-4, 7-6 (7/4) விகிதத்தில் ஜோகோவிச் வென்றார். 

20 வயதான கார்லோஸ் அல் காரஸ், தரவரிசையில் உலகின்  தற்‍போ‍தைய முதல் நிலை வீராவார். கடந்த வருடம் அமெரிக்கப் பகிரங்க சுற்றுப்போட்டியில் சம்பியனாகியவர். அவர் தனது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கு குறி வைத்துள்ளார்.

36 வயதான நோவாக் ஜோகோவிச் உலகின் 2 ஆம் நிலை வீரர். ஆண்களில் 23 கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்தவர். இவ்வருடத்தின் அவுஸ்திரேலிய, பிரெஞ்சு பகிரங்க சுற்றுப்போட்டிகளிலும் அவரே சம்பி யனானார்.

விம்பிள்டனில் 7 தடவைகள் ஜோகோவிச் சம்பியனாகியுள்ளார். 2018 முதல் தொடர்ச்சியாக 4 தடவைகள் விம்பிள்டன் சம்பியனாகிய அவர், இம்முறை தொடர்ச்சியான 5 ஆவது விம்பிள்டன் சம்பியன் பட்டத்தை குறி வைத்துள்ளார். 

இம்முறை அவர் சம்பியனானால், 8 விம்பிள்டன் பட்டங்களை வென்ற சுவிட்ஸர்லாந்து வீரர் ரோஜர் பெடரரின் சாதனையை சமப்படுத்துவார். இதன் மூலம் 24 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்ற அவுஸ்திரேலிய வீராங்கனை மார்கரெட் கோர்ட்டின் சாதனை‍யையும் ஜோகோவிச் சமப்படுத்துவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று சோண்டர்ஸ் - யங் சில்வர்,...

2024-03-03 09:40:12
news-image

107ஆவது பொன் அணிகளின் சமர் :...

2024-03-03 09:38:44
news-image

யூபி வொரியர்ஸிடம் வீழ்ந்த குஜராத் ஜயன்ட்ஸின்...

2024-03-02 14:30:01
news-image

விக்டரி - குறே கழகங்களுக்கு இடையிலான...

2024-03-02 14:01:12
news-image

குசல் பெரேராவுக்குப் பதில் நிரோஷன் திக்வெல்ல

2024-03-01 22:47:20
news-image

ரசிகர்களை கோபமூட்டிய ரொனால்டோவுக்கு ஒரு போட்டித்தடை,...

2024-03-01 17:22:29
news-image

ஆஸி. வீரர் க்றீன் ஆட்டம் இழக்காமல்...

2024-03-01 16:18:07
news-image

டெல்ஹியின் வெற்றியில் கெப், ஜொனாசன், ஷஃபாலி...

2024-03-01 15:05:04
news-image

ஒலிம்பிக் விழாவுக்கான பாதுகாப்பு திட்டங்களைக் கொண்ட...

2024-02-29 20:04:27
news-image

பங்களாதேஷுடனான தொடர்களில் திறமையை வெளிபடுத்த முடியும்...

2024-02-29 14:55:53
news-image

பங்களாதேஷுடனான முதல் இரண்டு ரி20 போட்டிகளில்...

2024-02-28 23:55:46
news-image

பொதுநலவாய செஸ் போட்டியில் இலங்கைக்கு ஒரு...

2024-02-28 21:19:17