தென் கொரியாவில் வெள்ளம், மண்சரிவுகளால் குறைந்தபட்சம் 33 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 10 பேர் காணாமல் போயுள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளர்.
தென் கொரியாவில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது.
இதனால்,; பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன் ரயில் சேவைகளும் பாதிப்படைந்துள்ளன.
இந்நிலையில், 33 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மண்சரிவுகளில் சிக்கியும், வெள்ளம் நிறைந்த நீர்நிலைகளில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட பிராந்தியத்தியத்திலுள்ள ஜியோங்சாங் மாகாணத்தில் மாத்திரம் 16 பேர் உயிரிழந்ததுடன் 9 பேர் காணாமல் போயுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோசான் நகரில் அணைக்கட்டு ஒன்று நிறைந்து வழிந்ததால், 6,400 பேரை வீடுகளிலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
தென் கொரியா முழுவதும் நேற்று பிற்பகல் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM