பானுக்கவின் சதம் வீண்போனது ; ஆப்கன் 'ஏ'யிடம் இலங்கை 'ஏ' தோல்வி

16 Jul, 2023 | 10:35 AM
image

(நெவில் அன்தனி)

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சி.சி.சி. மைதானத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற வளர்ந்துவரும் அணிகள் ஆசிய கிண்ண ஏ குழு போட்டியில் மினோத் பானுக்க தனி ஒருவராகப் பிரகாசித்து அபார சதம் குவித்தபோதிலும் 11 ஓட்டங்களால் இலங்கை தோல்வி அடைந்ததால் அவரது முயற்சி வீண் போனது.    

ஆப்கானிஸ்தான் ஏ அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 253 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 38.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

முன்வரிசை மற்றும் மத்திய வரிசை வீரர்கள் மிக மோசமாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்க 17 ஓவர்கள் நிறைவில் இலங்கை 7 விக்கெட்களை இழந்து 102 ஓட்டங்களை மாத்திரம் பெற்று  படுதோல்வியை எதிர்நோக்கிக் கொண்டிருந்தது.

அப்போது 36 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்த மினோத் பானுக்கவுடன் துஷான் ஹேமன்த ஜோடி சேர்ந்த பின்னர் இலங்கை ஏ அணி துடுப்பாட்டம் முதல் தடவையாக பிரகாசிக்கத் தொடங்கியது.

இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 8ஆவது விக்கெட்டில் 98 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 200 ஓட்டங்களாக உயர்த்தி இலங்கை ஏ அணிக்கு உயிரூட்டினர். அப்போது 15 ஓவர்களுக்கு மேல் இருந்ததால் ஓவருக்கு 3 ஓட்டங்கள் வீதம் பெற்றால்கூட இலங்கை ஏ அணிக்கு வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக துஷான் ஹேமன்த 31 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தது இலங்கை ஏ அணிக்கு பேரிடியைக் கொடுத்தது.

இந் நிலையில் மினோத் பானுக்க தொடர்ந்து தனி ஒருவராக இலங்கை ஏ அணியின் வெற்றிக்காக கடுமையாக முயற்சித்தார். ஆனால் அவர் ஆட்டம் இழந்ததால் இலங்கை ஏ அணிக்கு இருந்த அற்ப சொற்ப நம்பிக்கையும் அற்றுப்போனது. இறுதியாக லஹிரு சமரக்கோன் அதிரடியாக ஓட்டங்களை எடுக்கவிளைந்து ஆட்டம் இழக்க இலங்கை ஏ அணி 21 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.

பானுக்க ராஜபக்ஷ 17 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 119 ஓட்டங்களையும் துஷான் ஹேமன்த 31 ஒட்டங்களையும் அணித் தலைவர் துனித் வெல்லாலகே 21 ஓட்டங்களையும் அஷேன் பண்டார 19 ஓட்டங்களையும்  லஹிரு  சமரக்கோன் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மொஹமத் இப்ராஹிம் 52 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹம்மத் சலீம், ஸியா-உர்-ரெஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் ஏ அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர் ரியாஸ் ஹசன்  அபாராமாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்ததுடன் 2ஆவது விக்கெட்டில் நூர் அலி ஸத்ரானுடன் 99 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் ஷாஹிதுல்லாவுடன் 59 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.

ரியாஸ் ஹசன் 82 ஓட்டங்களையும் நூர் அலி ஸத்ரான் 53 ஓட்டங்களையும் ஷஹிதுல்லா 23 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் இக்ரம் அலிகில் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை ஏ அணி பந்துவீச்சில் சாமிக்க கருணாரட்ன 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லஹிர சமரக்கோன் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துஷான் ஹேமன்த 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: மினோத் பானுக்க

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று சோண்டர்ஸ் - யங் சில்வர்,...

2024-03-03 09:40:12
news-image

107ஆவது பொன் அணிகளின் சமர் :...

2024-03-03 09:38:44
news-image

யூபி வொரியர்ஸிடம் வீழ்ந்த குஜராத் ஜயன்ட்ஸின்...

2024-03-02 14:30:01
news-image

விக்டரி - குறே கழகங்களுக்கு இடையிலான...

2024-03-02 14:01:12
news-image

குசல் பெரேராவுக்குப் பதில் நிரோஷன் திக்வெல்ல

2024-03-01 22:47:20
news-image

ரசிகர்களை கோபமூட்டிய ரொனால்டோவுக்கு ஒரு போட்டித்தடை,...

2024-03-01 17:22:29
news-image

ஆஸி. வீரர் க்றீன் ஆட்டம் இழக்காமல்...

2024-03-01 16:18:07
news-image

டெல்ஹியின் வெற்றியில் கெப், ஜொனாசன், ஷஃபாலி...

2024-03-01 15:05:04
news-image

ஒலிம்பிக் விழாவுக்கான பாதுகாப்பு திட்டங்களைக் கொண்ட...

2024-02-29 20:04:27
news-image

பங்களாதேஷுடனான தொடர்களில் திறமையை வெளிபடுத்த முடியும்...

2024-02-29 14:55:53
news-image

பங்களாதேஷுடனான முதல் இரண்டு ரி20 போட்டிகளில்...

2024-02-28 23:55:46
news-image

பொதுநலவாய செஸ் போட்டியில் இலங்கைக்கு ஒரு...

2024-02-28 21:19:17