யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சிரேஷ்ட ஊடகவியலாளராகவும், அதன் பின்னர் கடந்த ஜனவரி மாதம் முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக கற்கைநெறி பீடத்தின் பேராசிரியராகவும், கடந்த ஏப்ரல் 5ஆம் திகதியிலிருந்து பதவி நிலை உயர்வுபெற்றுள்ள பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதியாகவும் கடமையாற்றியுள்ள சி.ரகுராம் நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை கெளரவிக்கப்பட்டுள்ளார்.
இந்த கெளரவிப்பு நிகழ்வு நாச்சிமார் ஆலயத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் மூத்த பத்திரிகையாளர் சி.பாரதி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பேராசிரியர் சி.ரகுராமுக்கு முன்னாள் தினக்குரல் பிரதம ஆசிரியர் தனபாலசிங்கம் மலர்மாலை அணிவித்து கெளரவித்ததை தொடர்ந்து, அவர் 'சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் ஊடகத்துறையில் வழிகாட்ட துடிக்கும் ரகுராம் அவர்களின் வகிபாகம்' என்ற கருப்பொருளில் சிறப்புரை ஆற்றினார்.
இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசியல்துறை பேராசிரியர் கணேசலிங்கம், சிரேஷ்ட ஊடகவியலாளர் நிக்ஸன், யாழ். ஊடக அமையத்தின் போசகர் தயாபரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM