"தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு சூர்யா தான்"

30 Jan, 2017 | 01:33 PM
image

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு சூர்யாதான் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியுள்ளார். 

சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சி3’ படம் வருகிற பிப்ரவரி 9ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. சூர்யா - ஹரி கூட்டணியில் சிங்கம் படத்தின் மூன்றாவது பாகமாக வெளிவரும் இப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

இந்நிலையில், இப்படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. அப்போது, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது, தமிழ், தெலுங்கு சினிமாவில் ரஜினிக்கு அடுத்த வியாபாரம் என்றால் அது சூர்யாவுக்குத்தான்.  ‘சிங்கம் 3’ படம் வெளியாவதற்கு முன்பே ரூ 100 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகி அதை நிரூபித்துள்ளது. தமிழ், தெலுங்கில் ரஜினி சாருக்கு அடுத்து சூர்யாதான். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று பேசினார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள 'சி3' படத்தில் சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர்,  ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35