
பல்வேறு விபத்துக்கள் காரணமாக 30ஆம் திகதி முதல் முதலாம் திகதிவரை 926 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது விபத்துக்களில் காயமுற்றோர் எண்ணிக்கை ஏழு சதவீதத்தால் குறைந்துள்ளது. வீதி விபத்துக்களில் 227 பேர் காயமுற்றுள்ளனர். இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது ஆறு சதவீதத்தால் குறைந்துள்ளது.
வெடிகள் விபத்து காரணமாக 10 பேர் காயமுற்றுள்ளனர். இது 37 சதவீதத்தால் குறைந்துள்ளது. மோதல், சச்சரவு காரணமாக 110 பேர் காயமுற்றுள்ளனர்.