பணத்தை பெருக்குவதற்கான எளிய பரிகாரங்கள்!

Published By: Ponmalar

15 Jul, 2023 | 05:17 PM
image

அரும்பாடுபட்டு உழைத்த பணத்தை சிக்கனமாக செலவு செய்து சேமித்தாலும்.. திடீரென்று ஏற்படும் எதிர்பாராத சூறாவளி செலவுகளால் எம்முடைய ஒட்டுமொத்த சேமிப்பும்  கரைந்து, கடன் வாங்கும் சூழல் ஏற்படும்போது.. சூழலை சமாளிக்க கடனை வாங்குவதை விட.., நம்மிடம் மீண்டும் பணம் வருவதற்கும், சிறிய அளவில் சேமிப்பதற்கும், சிறிய அளவில் சேமித்து வைத்திருக்கும் பணத்தை பெருக்குவதற்கும்… எம்முடைய ஆன்மீக பெரியோர்கள் முன்மொழிந்திருக்கும் சில தாந்திரீக... சூட்சம... வாழ்வியல் பரிகாரங்களை பின்பற்றலாம். அவற்றை கடைபிடித்து பணத்தை வரவழைத்து அதனை தக்க வைத்து பெருக்கிக் கொள்ளுங்கள்.

அமாவாசை தினத்தன்று எம்முடைய வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. நீங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்தாலும் உங்களது வாசலில் கோலம் போடுவதை தவிர்க்கவும். காலைப் பொழுதில் பூஜை செய்வதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அன்று சூரிய உதயம் முதல் சூரியன் உச்சம் செல்லும் வேளை வரை அதாவது நண்பகல் வரை பித்ருக்களை  மட்டுமே வணங்க வேண்டும். இதனை தொடர்ந்து வணங்கி வந்தால்... பணம் வரத் தொடங்கும்.

பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடமும், இறைபணியில் ஈடுபட்டிருப்பவர்களிடமும், இறைவனின் நாமத்தை சதா சர்வ காலமும் உச்சரித்துக் கொண்டு, சுய ஒழுக்கத்துடனும்... சமூகத்தில் முன்னுதாரணமான இறைத் தொண்டனாகவும் வாழ்பவர்களிடம் ஆசி பெற்றால்… எம்முடைய புண்ணியத்தின் வலிமை அதிகரித்து, பண வரவு ஏற்பட தொடங்கும்.

வாடகை வீட்டில் வசித்தாலும் அல்லது சொந்த வீட்டில் வசித்தாலும் அந்தி சாய்ந்த பிறகு அதாவது சூரியன் மறைந்த பிறகு பால், தயிர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகளை யாருக்கும் தரக்கூடாது. அதாவது இவைகள் அனைத்தும் எந்த வழியிலும் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது. உங்களுடைய இரக்கம் காரணமாகவோ அல்லது அதீத நட்பின் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோ மேற்கூறியவற்றை நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்தால்... உங்களிடமிருந்த தன வரவு குறைந்து, பற்றாக்குறை உண்டாகும். சிலருக்கு இவை நீடிக்கவும் செய்யும்.

எம்முடைய வீட்டிற்கு வருகை தரும் சுமங்கலி பெண்களுக்கு வெள்ளி பாத்திரத்திலோ அல்லது தாமிர பாத்திரத்திலோ அல்லது வேறு ஏதேனும் கோப்பையிலோ அவர்கள் அருந்துவதற்கு குடிநீர் தர வேண்டும். அவர்கள் பேசிவிட்டு விடைபெறும்போது மறவாமல் மஞ்சள், குங்குமத்தை தர வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வரும் போது எம்முடைய வீட்டில் எம்மையும் அறியாமல் குடி கொண்டிருக்கும் தரித்திரம் நீங்கி, பணவரவு வரத் தொடங்கும்.

எம்முடைய சமையலறையில் தவறாமல் இடம் பிடித்திருக்கும் ஒரு உணவுப் பொருள் ஊறுகாய். பசியாறும்போது சுவைக்காக பலரும் ஊறுகாயை சுவைப்பர். உங்களுடைய வீட்டில் ஊறுகாய் இல்லையென்றால்... உடனே அதனை வாங்கி வைத்துக் கொள்ளவும். சிலருக்கு சாப்பிட ஊறுகாய் பிடிக்காது என்றாலும், ஊறுகாயை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பணத்தின் அதிபதியான குபேரனுக்கு ஊறுகாய் என்றால் மிகவும் பிடிக்கும். ஊறுகாய் இருக்கும் இடத்தில் அவருடைய ஆசிகள் நிறைந்திருக்கும் என்பதால், நீங்கள் ஊறுகாயை வாங்கி வைத்தால்.. குபேரனின் அருள் கிட்டும். தன வரவும் உண்டாகும்.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் வரும் குரு ஓரை காலத்தில் குபேரனை வழிபட்டால் பணம் வரும்.

எம்முடைய வீடுகளில் முல்லை, மல்லிகைப்பூ போன்ற வெண்மை நிற  பூச்செடிகளை வளர்க்கத் தொடங்கினால் பண தட்டுப்பாடு நீங்கி, தொடர்ந்து பண வரவு இருக்கும்.

எம்முடைய வீடுகளில் காலை மற்றும் மாலை வேளையில் விளக்கு ஏற்றும் போது குறிப்பாக காமாட்சி விளக்கினை ஏற்றும் போது தீபத்தில் டைமன் கல்கண்டு ஒன்றினை பொடித்து தீபம் ஏற்ற வேண்டும். இப்படி செய்யும் போது லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு பணவரவு உண்டாகும்.

மேற்கூறிய எளிய பரிகாரங்கள் எம்மவர்களால் பின்பற்றப்பட்டு பலன் கிடைத்த பிறகு எடுத்துரைக்கப்படுவதால்.., இதனை நீங்களும் கடைபிடித்து பண தட்டுப்பாடின்றி பணவரவை உண்டாக்கிக் கொள்ளுங்கள்.

தொகுப்பு: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நினைக்கும் காரியங்களில் வெற்றி பெற சங்கு...

2025-04-26 14:04:15
news-image

பில்லி சூனிய பாதிப்பிலிருந்து விடுபட உதவும்...

2025-04-24 14:39:26
news-image

வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் ஏழு...

2025-04-24 14:27:07
news-image

தன வசியம் நிகழ்த்தும் யோகினி வழிபாடு..!?

2025-04-23 16:11:22
news-image

வராத பணத்தை வசூலிப்பதற்கான பிரத்யேக வழிபாடு..!?

2025-04-22 16:24:25
news-image

தங்க நகைகளை சேமிப்பதற்கான சூட்சும வழிபாடு..!?

2025-04-21 15:35:22
news-image

சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி பிரத்யேக...

2025-04-19 17:24:56
news-image

நினைத்ததை நிறைவேற்றுவதற்கு நாளாந்த தீப வழிபாடு

2025-04-18 18:32:08
news-image

‘மரணத்துக்கு ஒப்பான முடிகாணிக்கை…?’

2025-04-18 15:27:33
news-image

எந்த பூவை பாவிக்கக்கூடாது?

2025-04-18 12:19:55
news-image

உங்கள் குல தெய்வம் யாரென தெரியாதா...

2025-04-17 14:17:35
news-image

தன வரவை சாத்தியப்படுத்தும் பூக்கள்..!!

2025-04-17 03:54:56