மருந்து வகைகளின் தரம் தொடர்பில் தீர்மானிக்க தொழில்நுட்பக் குழு அமைத்து அறிக்கை கோரவேண்டும் - விசேட வைத்திய நிபுணர் சமல் சன்ஜீவ 

14 Jul, 2023 | 07:23 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

தரமற்ற தடுப்பூசி மற்றும் மருந்து காரணமாகவா நோயாளர்கள் மரணிக்கிறார்கள் என்பது தொடர்பில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது, தொழில்நுட்ப குழுவொன்றை அமைத்து அது வழங்கும் அறிக்கையின் அடிப்படையிலாகும். மாறாக, ஊடக களியாட்டங்கள் ஊடாக அல்ல. அத்துடன் தற்போது வரை மரணமடையக்கூடிய அல்லாத நோயாளர்கள் குறிப்பிடத்தக்க அளவில் நியாயமற்ற முறையில் மரணித்திருப்பதை சாதாரணமாக கருத முடியாது என சிவில் உரிமைகள் தொடர்பான வைத்திய தொழில் சங்க கூட்டணியின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சன்ஜீவ தெரிவித்தார்.

வைத்தியசாலைகளில் ஏற்றப்படும் மயக்க மருந்து தொடர்பாக பலராலும் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் தடுப்பூசி மற்றும் மயக்க மருந்து தொடர்பாக பல்வேறு தரப்பினரும் ஊடக சந்திப்புகளை நடத்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அண்மையில் பேராதனிய வைத்தியசாலையில் இடம்பெற்ற எதிர்பாராத மரணங்களுக்கு தரமற்ற தடுப்பூசி மற்றும் மருந்து பொருட்களா காரணம் என்பதை தேடிப்பார்க்க தொழிநுட் குழு அமைத்து, அந்த குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே அது தொடர்பில் தீர்மானத்துக்கு வரவேண்டும். 

அவ்வாறு இல்லாமல் ஊடக களியாட்டங்களை நடத்தி தெரிவிக்கப்படும் கருத்துக்களை அடிப்படையாக்கொண்டு உறுதிப்பாட்டுக்கு வரமுடியாது. அத்துடன் தற்போது வரை மரணமடையக்கூடிய அல்லாத நோயாளர்கள் குறிப்பிடத்தக்களவில் நியாயமற்ற முறையில்  மரணித்திருப்பதை சாதாரணமாக கருத முடியாத காரணமாகும்.

மேலும் மயக்க மருந்து தொடர்பாக  தொடர்ந்தும் வைத்தியர்கள் ஒரு சில கருத்துக்களை வெளியிட்ட பின்னர் தற்போது பயன்படுத்திய தடுப்பூசியை பாவனையில் இருந்து நீக்குவதற்கு தீர்மானித்திருக்கிறது. அதற்கு பதிலாக இந்தியாவில் இருந்து புதிதாக கொண்டுவருவதாக தெரிவிக்கப்படும் தடுப்பூசி, முறையான பரிசோதனையின் பின்னரா கொண்டுவருகிறது என கேட்கிறோம்.

மேலும் அரச வைத்தியசாலைகளில் நிலவிவரும் பாரிய மருந்து தடுப்பாட்டுக்கு மத்தியில் தரமற்ற மருந்து வகைகளை கொண்டுவருவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பெறுமதிமிக்க உயிர்கள் அழிந்த பின்னர் அதற்கு பல்வேறு காரணங்களை தேடிக்கொண்டு ஊடக சந்திப்புக்களை நடத்துவேண்டி ஏற்பட்டாலும். அதில் இருந்து முடிவடையாமல் ஒட்டுமொத்த சுகாதார துறையும் வீழ்ச்சியடையும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-17 16:44:03
news-image

அங்குருவாதொட்ட தேவாலயத்தில் தங்க முலாம் பூசப்பட்ட...

2025-02-17 16:22:34
news-image

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக...

2025-02-17 16:19:05
news-image

தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான...

2025-02-17 16:21:08
news-image

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக் கைதி சிகிச்சை...

2025-02-17 16:19:56
news-image

இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்...

2025-02-17 15:21:30
news-image

கார் மோதி இரு எருமை மாடுகள்...

2025-02-17 15:04:41
news-image

மின் கம்பத்தில் மோதி கார் விபத்து...

2025-02-17 14:46:13
news-image

உரகஸ்மன்ஹந்தியவில் போதைப்பொருள், துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

2025-02-17 14:26:56
news-image

2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு -...

2025-02-17 13:53:21
news-image

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு “நோயை குணப்படுத்தக்கூடிய...

2025-02-17 13:26:22
news-image

2 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர்...

2025-02-17 13:04:29