இன்று டெங்கு நோயால் மக்கள் இறக்க கூடாது என டெங்கு ஊழியர்கள் மாவட்ட ரீதியாக செயற்படும் போது சுகாதார அமைச்சரின் ஊழல் காரணமாக தரம் குறைந்த ஊசிகளை கொண்டுவந்த விடயங்களால் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர்.
மக்களை காப்பாறி கொண்டிருக்கின்ற டெங்கு ஊழியர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முன் இன்று வெள்ளிக்கிழமை (14) டெங்கு ஒழிப்பு ஊழியர்களை நிரந்தர நியமனம் செய்யுமாறு கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இரா.சாணக்கின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் உள்ள ஆயிரம் டெங்கு ஒழிப்பு உதவியாளரர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேல் தங்களை நிரந்தரமாக்குமாறு கோரி வருகின்றனர்.
இவர்கள் அரசாங்கம் இக்கட்டான நிலையில் முகம் கொடுத்த காலப்பகுதி மற்றும் கொரோனா காலப்பகுதியில் உயிரை பணயம் வைத்து இந்த நாட்டிலே மக்களின் பாதுகாப்புக்காக மிக குறைந்த சம்பளமான ஒரு நாளைக்கு 700 ரூபா சம்பளத்திற்கு கடமையாற்றி வருகின்றனர்.
இந்த நாட்டில் டெங்கு நோய் அதிகரித்துள்ள போது இவர்களது பணி இல்லாவிட்டால் எத்தனையோ பேர் மரணித்து இருப்பார்கள். எனவே இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பல தடைவ பேசியுள்ளோன்.
நாடாளுமன்றம் சென்று வீரமாக பேசி வருவதை விட இவ்வாறான பிரச்சினையை தீர்ப்பதற்கு அமைச்சர்களுடைய ஆலோசனைகுழு கூட்டத்தில் பேசவேண்டும்.
அதற்கமைய பவித்திரா வன்னியாராச்சி அமைச்சராக இருந்தபோது அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியுள்ளேன் அதனை தொடர்ந்து ஹெலிய ரம்புக்வெல அமைச்சராக இருக்கும் வரை பேசியுள்ளேன்.
ஆளும் கட்சியில் 2020 ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டு இன்று இராஜாங்க அமைச்சராக இருப்பர் கூட இந்த டெங்கு ஊழியர்களுக்கு நிரந்தரமான நியமனம் வழங்க கூடாது வேலையில் இருந்து நிறுத்தவேண்டும். இது தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லீம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி போன்ற கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு நல்லாட்சி காலத்தில் வழங்கப்பட்ட நியமனங்களை நிறுத்திவிட்டு தங்களின் ஆதரவாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்பதில் இந்த ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது இதில் சிலர் இலஞ்சம் கொடுத்தனர்.
இந்த ஒரு இலட்சம் பேரை நிரந்தரமாக்கும் போது இவர்களையும் நிரந்தரமாக்கவும் என கோரினோம். மட்டக்களப்பில் இவ்வாறு கஸ்டப்பட்டவர்கள் இருக்கின்றனர் என்பதற்காக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன்.
இன்று டெங்கு நோயால் மக்கள் இறக்க கூடாது என டெங்கு ஊழியர்கள் மாவட்ட ரீதியாக செயற்படும் போது அமைச்சர் தரம் குறைந்த ஊசிகளை கொண்டுவந்ததன் காரணத்தால் பேராதனையில் இளம் யுவதி இறந்துள்ளார்.
அதற்கான காரணம் 10 மில்லி மீற்றர் ஊசியை பயன்படுத்த வேண்டியதற்கு பெரிய ஊசியை பயன்படுத்தியமையால் இந்த விடயம் இடம்பெற்றுள்ளதாம். பேராதனை வைத்தியசாலை இலங்கையில் இருக்கும் 2 வது வைத்தியசாலை அந்த வைத்தியசாலையில் 10 எம் எம் ஊசி இல்லை என்றால் எமது கிராமப்புற வைத்தியசாலைகளில் அந்த ஊசி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.
எங்கள் ஊரில் வைத்தியசாலையில் சிலர் இறந்தால் பேய் அடித்து இறந்தார்கள் என சொல்வார்கள் உண்மையில் பேய் அடித்து சாகவில்லை பிழையான ஊசியை போட்டு சாகடித்திருப்பார்கள் உண்மையில் இங்கு பேயும் அடிக்கவில்லை பிசாசும் அடிக்கவில்லை சுகாதார அமைச்சரின் ஊழல் காரணத்தால் தரம் குறைந்த ஊசி மருந்துக்களை கொண்டுவந்ததால் தான் இறப்பு இடம்பெற்றுள்ளது.
அமைச்சரின் ஊழலால் நாற்றுக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர் ஆனால் இந்த டெங்கு ஊழியர்கள் மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றனர் இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
ஜனாதிபதியின் பிரதமராக காலப்பகுதியில் தான் இவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது அவர் இன்று மொட்டுகட்சியின் அரசியல் கைதியாக இருந்தாலும் கூட நீதியை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு பொறுப்பு இருக்கின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM