மலேசியாவின் பிரபல சுற்றுலா தீவுகள் ஒன்றில் படகொன்று கவிழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இச் சம்பவம் மலேசியாவின் சபா கடல் பகுதியில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. சீனா நாட்டு சுற்றுலாப் பிரயாணிகளை ஏற்றிச் சென்ற படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளது.

படகு கவிழந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீன்பிடி படகுகளின் உதவியுடன் 23 பேரை் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

படகு கவிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.