(எம்.ஆர்.எம்.வஸீம்)

வெளிநாட்டு தொழிலுக்காக செல்லும் பெண்களில் வீதம் குறைவடைந்துள்ளதுடன் ஆண்களின் வீதம் அதிகரித்துள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு டிசம்பர் வரையான ஒருவருட காலத்தில் ஆண்கள் பெண்கள் என 4இலட்சம் பேர் சென்றுள்ளனர். இவர்களில் ஒரு இலட்சத்தி 72ஆயிரத்து 780 பெண்கள் சென்றுள்ளதுடன் 2 இலட்சத்தி 31 ஆயிரத்தி 634 ஆண்கள் சென்றுள்ளனர்.

அத்துடன் பெண்களில் அதிகமானவர்கள் சவூதி அரேபியாவுக்கே பணிப்பெண்களாக சென்றுள்ளனர். இருந்தபோதும் கடந்த 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பெண்கள் செல்வது குறைவடைந்துள்ளதுடன் ஆண்களின் வீதம் அதிகரித்துள்ளது. அதனடிப்படையில்  பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் வீதம் 38 வரை குறைவடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் இஷ்திரத்தன்மையுடன் தொழில் வாய்ப்புக்கள் எற்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பெண்கள் செல்லும் வீதம் மேலும் குறைவடையும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.