(இராஜதுரை ஹஷான்)
மருந்து இறக்குமதி விவகாரத்தில் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளின் உண்மை தன்மையை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.
இது அலட்சியப்படுத்தும் விடயமல்ல,தேசிய ஒளடதங்கள் கண்காணிப்பு அதிகார சபையை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைக்க தீர்மானித்துள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அவசர மருந்து கொள்வனவை தொடர்ந்து சுகாதாரத்துறை பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.சுகாதார சேவைகள் குறித்து மக்கள் மத்தியில் காணப்படும் நம்பிக்கை;கு பாதிப்பு ஏற்பட்டால் அது மாறுப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
மருந்து தட்டுப்பாடு,தரமற்ற மருந்து பயன்பாடு தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் துறையின் அதிகாரிகள் குறிப்பிடும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
மருந்து இறக்குமதி விவகாரத்தில் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளின் உண்மை தன்மையை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.
இதனை அலட்சியப்படுத்த முடியாது.தேசிய ஒளடதங்கள்; கண்காணிப்பு அதிகார சபையை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைக்க தீர்மானித்துள்ளோம்.
தேசிய ஒளடதங்கள் கண்காணிப்பு அதிகார சபையின் செயற்பாடுகள் முறையாக இடம்பெறுகிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.
அரசியல் பரிந்துரைகளுடன் முக்கிய பதவிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.ஆகவே இந்த தவறை முதலில் திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM