நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற வரலாற்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது இந்தியா. அதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கும் சந்திரயான் 3 விண்கலத்தில் என்ன இருக்கும்? எப்படி செயல்படும் ?
சந்திரயான் -3 விண்கலம் திட்டமிட்டபடி இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது.இதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று பகல் ஒரு மணிக்குத் தொடங்கியது. விண்கலத்தை ஏந்திச்செல்லும் ராக்கெட்டில் திட, திரவ எரிபொருட்கள் நிரப்பப்பட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் பகுதி நிலவில் தரையிறங்கும் நிலையில், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ரோவர் கருவி 100 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடிக்கு சந்திரயான் -3 விண்கலத்தை சுமந்து கொண்டு ராக்கெட் விண்ணில் பாய்கிறது.
இந்த நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தில் என்ன இருக்கும்? எப்படி செயல்படும் என்பதை தற்போது பார்க்கலாம்…
நிலவுக்கு பயணம் மேற்கொள்ளும் சந்திராயன் 3 விண்கலத்தில் ஊர்திகலம், உந்துகலம், தரையிறங்கி கலம் என மூன்று கலங்கள் உள்ளன.
2. முந்தைய சந்திரயான் விண்கலங்களை ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் சுமந்து சென்ற நிலையில் சந்திரயான் 3 விண்கலத்தை எல்.வி.எம் 3 எனும் பிரம்மாண்ட ராக்கெட் சுமந்து செல்கிறது.
3. பூமியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிலோ மீட்டர் உயரத்திற்கு சந்திரயான் 3 விண்கலத்தை கொண்டு சென்று நிலை நிறுத்துவது தான் ராக்கெட்டின் முதல்பணி.
. ராக்கெட்டிற்கு விண்வெளியில் வழங்கப்படும் உந்துதலின் மூலம் புவியின் நீள்வட்டப்பாதையில் பூமிக்கு அருகில் இருக்கும் போது 170 கிலோ மீட்டர் தூரத்திலும், தொலைவில் இருக்கும் போது 36 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்திலும் விண்கலம் இருக்கும்.
5. புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் விண்கலத்தை நெடுந்தொலைவுக்கு தள்ளிவிட்டு நிலவின் சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்வது தான் அடுத்த பணி.
6. பூவியின் ஈர்ப்புவிசையும், நிலவின் ஈர்ப்பு விசையும் சரிசமமாக இருக்கும் ஒரே புள்ளியில் விண்கலத்தை துல்லியமாக நிறுத்துவதோடு உந்து சக்தி கொடுத்துக் கொண்டே விண்கலத்தை நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் கொண்டு செல்லப்படுகிறது.
7. தொடர்ந்து விண்கலம் பயணிக்கும் நீள்வட்டப் பாதையை கொஞ்சம் கொஞ்சமாக சரிசெய்து நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100கிலோ மீட்டர் முதல் குறைந்தபட்சமாக 30 கிலோ மீட்டர் வரையிலான நீள்வட்டப்பாதையில் சுற்றவைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
8. இதுவரையிலான பணிகளை திறம்பட செய்திருந்தாலும் அடுத்து வரக்கூடிய பணி தான் மிகவும் சவால் மிகுந்ததாக இருக்கிறது. நிலவில் சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்குவது தான் அந்த சவால் மிகுந்த பணி. இந்த பணிக்கு ஆகக்கூடிய நேரம் வெறும் 15 நிமிடங்கள் தான் என்றாலும் இந்த 15 நிமிடங்கள் தான் முழு திட்டமும் வெற்றி பெறுகிறதா இல்லையா என்பதை தீர்மானிக்கிறது.
9. கடந்த முறை விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 திட்டம் தோல்வியடைந்ததும் இதே இடத்தில் தான். சந்திராயன் 2 திட்டத்தின் போது நிலவின் தரைப்பரப்பில் விண்கலத்தை இறக்கும் போது தான் தவறு நிகழ்ந்து கிழே விழுந்து உடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
10. எனவே இந்த முறை இஸ்ரோ விஞ்ஞானிகள், தரையிறங்கி கலத்தில் முன்பு நடந்த தவறுகளுக்கான காரணங்களை கண்டறிந்து அதனை சரிசெய்திருப்பதாகவும் பாதுகாப்பாக தரையிறங்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
11. தரையிறங்கி கலம் நிலவின் தரையில் இறங்கியதும் அதனைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சுவர்களில் ஒன்று சாய்வுப் பலகையைப்போல திறந்து கீழ்நோக்கி இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த சாய்வு பலகையின் வழியே உருண்டு இறங்கி நிலவின் தரையில் தடம் பதிக்கும் ஊர்திக்கலம் தன்னுடைய வேலையை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM