குருந்தூர் மலையில் பொங்கல்! இனவாதத்தை தூண்டி பெரும்பான்மையினரை அணிதிரட்டும் தேரர்

Published By: Vishnu

13 Jul, 2023 | 09:43 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (14) பொங்கல் நிகழ்வு ஒன்றை செய்யவுள்ளதாகவும் அனைவரும் அணிதிரளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழர்களால் இந்து ஆலயம் ஒன்று நிறுவப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அங்கு இனமுறுகல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்து நீதிமன்ற கட்டளைகளை மீறி அங்கு விகாரை கட்டுமான பணிகளை முன்னின்று  செயற்படுத்திய வெலிஓயா சப்புமல்தன்ன விகாரை ,மற்றும் குருந்தூர் மலையில்  சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குருந்தி விகாரை ஆகியவற்றின் விகாராதிபதி   கல்கமுவ சாந்தபோதி தேரர் செவ்வாய்க்கிழமை (11) முல்லைத்தீவு காவல்நிலையத்தில் மூவரின் பெயர்களையும் குறிப்பிட்டு முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் மயூரன் மற்றும் நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையாக மக்கள் பேரியக்கத்தின் இணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகிய மூவருக்கு எதிராக  இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கல்கமுவ சாந்தபோதி தேரர் முகநூலில் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சார்ந்த தமிழ்த் தீவிரவாதிகள் மற்றும் இந்துக் குருமார்களையும் இணைத்து மிகப்பெரிய பூஜை ஒன்றை நடத்தி ஆலயம் ஒன்றை நிறுவ இருப்பதாக  தகவல் கிடைத்துள்ளதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு எதிராக வெள்ளிக்கிழமை (14) சிங்கள மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் புதன்கிழமை (12)  துரைராசா ரவிகரன்   பிறிதொரு தேவைக்காக முல்லைத்தீவு காவல் நிலையம் சென்றபோது அவரை அழைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த ரவிகரன்  “எவ்வாறாயினும்  வெள்ளிக்கிழமை (14) பூஜைகள் நடைபெறும் “ எனக் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன்...

2024-10-04 02:25:10
news-image

வடமாகாண போக்குவரத்து தொடர்பில் கலந்துரையாடல்

2024-10-04 02:17:30
news-image

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 8 சுயேட்சை...

2024-10-04 02:12:15
news-image

பொதுத்தேர்தல் முடிவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான...

2024-10-04 02:00:44
news-image

மக்களுக்கு வரிநிவாரணங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது...

2024-10-03 21:47:02
news-image

கூரையில் இருந்து கீழே விழுந்து நபர்...

2024-10-03 21:10:24
news-image

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க...

2024-10-03 21:06:55
news-image

ஐ.நா. அமைப்பின் இணைப்பாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு 

2024-10-03 21:01:26
news-image

மன்னார் பேசாலை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட...

2024-10-03 20:55:05
news-image

குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம்...

2024-10-03 19:11:19
news-image

வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன்...

2024-10-03 18:56:38
news-image

தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் கட்சிகள்...

2024-10-03 18:31:43