(இராஜதுரை ஹஷான்)
அரச வைத்தியசாலைகளுக்கு சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இருக்குமா என மக்கள் அச்சம் கொள்ளும் நிலை தோற்றம் பெற்றுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சின் செயலாளர் பதவி விலக வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பொரளை பகுதியில் உள்ள இலங்கை கம்யூனிசக் கட்சி காரியாலயத்தில் வியாழக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சரவை உறுப்பினர்கள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். ஆனால், நடைமுறையில் நிலைமை எதிர்மறையாக உள்ளது. பொருளாதாரப் பாதிப்பின் ஒட்டுமொத்த சுமையும் நடுத்தர மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இலவச சுகாதார சேவை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மருந்து தட்டுப்பாடு நெருக்கடி தோற்றம் பெற்றவுடன் அவசர கொள்வனவு முறையில் திறந்த விலை மனுக்கோரல் இல்லாமல் மருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவில் இருந்து அவசர கொள்வனவு முறையில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளின் தரம் தொடர்பில் பாரிய சர்ச்சை தோற்றம் பெற்றுள்ளது. மருந்து தட்டுப்பாடு மற்றும் தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சர் சிறுபிள்ளை போல் கருத்துரைக்கிறார்.
மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து கொள்வனவினால் இலவச சுகாதார சேவையை நம்பியுள்ள நடுத்தர மக்களே தற்போது பெரும் அச்சம் கொண்டுள்ளனர். அரச வைத்தியசாலைகளுக்கு சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இருக்குமா என்ற நிலை தற்போது காணப்படுகிறது.
நாட்டு மக்களின் சுகாதாரம் கேள்விக்குள்ளாக்கியுள்ள நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர்,சுகாதார அமைச்சின் செயலாளர் பதவி விலக வேண்டும்.தொடர்ந்து பதவி வகிக்க அவர்களுக்கு தார்மீக உரிமை கிடையாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM