பீட்சா மீது கொண்ட அளவில்லா பிரியத்தினால், 18 வயது பெண் தனது வாழ்க்கையின் துணையாக பீட்சாவை மணந்த சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது. 

இங்கிலாந்தை சேர்ந்த 18 வயதான கிறிஸ்டினா வாக்னர் எனும் பெண், பீட்சா மீது கொண்ட அளவில்லா பிரியம் காரணமாக பீட்சாக்களை திருமணம் செய்து கொண்டார். 

கிறிஸ்டினா அதிகமாக  பீட்சா உண்டதால்,  பீட்சா மீது காதல் ஏற்பட்டுள்ளது. எனவே பீட்சாவையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். மேலும் தனது பாட்டியின் திருமண உடையை அணிந்து பீட்சாவை மணந்துள்ளார்.

பீட்சாவை தான் திருமணம் செய்து கொண்டதாகவும், அதை தன் கணவராக ஏற்றுக் கொண்டதாகவும், கிறிஸ்டினா தனது பேஸ்புக் பதிவின் மூலம் தகவல் பகிர்ந்துள்ளார். இதை ஒரு விசித்திர நிகழ்வாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.