தடுப்பூசி ஏற்றப்பட்ட யுவதி உயிரிழந்த சம்பவம் : விசாரணைகள் ஆரம்பம்

Published By: Vishnu

13 Jul, 2023 | 03:32 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட யுவதி ஒருவர் தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கண்டி, பொத்தபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய குறித்த யுவதி வயிற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே  உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மரணம் தொடர்பில் யுவதியின் குடும்பம் பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.

21 வயதான சமோதி சங்கதீபனீ எனும் யுவதி கடந்த திங்கட்கிழமை வயிற்றுப்போக்கு காரணமாக கெடப்பிடடிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அன்றையதினம் சிகிச்சை பெற்ற அவர் செவ்வாய்க்கிழமை பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்த யுவதியின் தாய் கூறுகையில் மூன்றரை மணியளவில் மகளுக்கு சேலைன் மருந்து மற்றும் இரண்டு மேலதிக மருந்துகளை ஏற்றினார்கள். மருந்து ஏற்றும் போது மகளின் கண்ணில் மாற்றம் ஏற்பட்டது. பின்னர் உடல் நீல நிறமாக மாறி கீழே விழுந்துவிட்டார்.

சிகிச்சையளிக்கப்பட்ட போது யுவதி உயிரிழந்துள்ளதாகவும் இதற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அர்ஜூன திலக்கரட்ன தெரிவித்தார்.

இதற்கு முன்னர் சிக்கல்களுக்குள்ளான மருந்துகள் வழங்கப்படவில்லை. அவருக்கு வழங்கப்பட்ட மருந்து ஏனைய நோயாளர்களுக்கும் வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் பேராதனை வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மயக்க மருந்து காரணமாக இரண்டு பெண்கள் உயிரிழந்ததுடன் அந்த மருந்து தொகுதியில் ஒரு வகை  பதார்த்தம் குறைவடைந்தமையே மரணத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரூ.24 பில்லியன் நட்டத்தில் இருந்து இலாப...

2026-09-09 12:25:53
news-image

20 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மலையக மக்களின்...

2026-09-09 17:35:50
news-image

மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்...

2026-09-09 12:45:30
news-image

மலையக மக்களின் வீடு, காணி உள்ளிட்ட...

2026-09-09 17:31:26
news-image

ராஜபக்‌ஷ குடும்ப அரசியலுக்கு இனி மக்கள்...

2026-09-09 13:44:30
news-image

ராஜ்நாத் சிங் இலங்கை விஜயத்தில் கைச்சாத்திடப்பட்ட...

2026-09-09 17:30:07
news-image

மன்னார்–இராமேஸ்வரம் நேரடி பயணிகள் கப்பல் சேவையை...

2026-09-09 14:12:24
news-image

திருகோணமலை துறைமுகத்தில் உள்ள ஈரான் கப்பல்...

2026-09-09 17:02:51
news-image

பயங்கரவாதத் தடைச் சட்டம்: அரசாங்கத்தின் சர்வதேச...

2026-09-09 14:21:59
news-image

பெருந்தோட்டக் கம்பனிகளின் குத்தகை காலத்தை நீடிக்கும்...

2026-09-09 17:36:29
news-image

இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி உத்தியோகபூர்வ...

2026-09-09 22:49:48
news-image

நாட்டில் அதிகரிக்கும் கொலைச் சம்பவங்கள்: தேசிய...

2026-09-09 14:52:24