(நெவில் அன்தனி)
விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தின் புதிய விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகமாக கலாநிதி ஷெமால் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிஙக தலைமையிலான அமைச்சரவையினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கலாநிதி பெர்னாண்டோ இலங்கை பல்கலைக்கழகத்தில் விளையாட்டு அறிவியலில் முனைவர் பட்டம் (PhD) பெற்ற முதல் இலங்கையர் ஆவார். நாட்டின் விளையாட்டுத் துறையில் முக்கிய பதவிக்கு அவசியமான வலுவான அளவுகோல்களை அவர் பூர்த்தி செய்துள்ளார்.
கலாநிதி பெர்னாண்டோ, சர்வதேச ஒலிம்பிக் குழுவின் பாடநெறியைப் பூர்த்திசெய்துள்ளதுடன், ஒலிம்பிக் ஒருமைப்பாடு புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் விளையாட்டுத்துறை நிர்வாகத்தில் மருத்துவ முதுமானி பட்டம் பெற்றவர்.
அவரது நற்சான்றிதழ்களில் முதுகலை தத்துவம் (MPhil) மற்றும் மேலாண்மைத் துறைகளில் முதுகலை அறிவியல் (MSc) மற்றும் புகழ்பெற்ற அமெரிக்காவின் கடற்படைப் போர்க் கல்லூரியில் சர்வதேச பணியாளர் படிப்பு மற்றும் பிற முதுகலை தகுதிகள் ஆகியவை அடங்கும்.
2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் மிகச்சிறந்த விளையாட்டு அறிவியல் கல்வியாளருக்கான மதிப்புமிக்க ஜனாதிபதி விளையாட்டு விருதையும், 2018 ஆம் ஆண்டின் சிறந்த கல்வி சாதனையாளருக்கான Silk Sports விருதையும் அவர் வென்றிருந்தார்.
கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்ற அவர், ஆர்வமுள்ள விளையாட்டு நிர்வாகி ஆவார்.
தேசிய ஒலிம்பிக் குழுவுடன் பல தசாப்தங்களாக கொண்டிருந்த தொடர்பின் மூலம் பெறுமதியான அனுபவத்தையும் பிரபல்யத்தையும் பெற்றுள்ளார். அத்துடன் விளையாட்டுத்துறை சங்கங்களில் தலைவர், செயளார்நாயகம் ஆகிய பதவிகளை வகித்த நிர்வாக அனுபவசாலியாவார்.
இலங்கை கடற்படையில் ஒரு சிறந்த, முன்மாதிரியான அதிகாரியாக பணியாற்றிய கலாநிதி ஷெமால் பெர்னாண்டோ இரண்டு நட்சத்திர அட்மிரல் ஆகவும் கடற்படை தலைமையகத்தில் பணிப்பாளர் நாயகம் ஆகவும் பதவி வகித்தார்.
அவரது பிந்தைய முனைவர் பட்ட ஆய்வுகளை அங்கீகரிக்கும் வகையில் சர்வதேச ஒலிம்பிக் வரலாற்று ஆசிரியர்கள் சங்கத்தினால் கௌரவிக்கப்பட்ட முதல் இலங்கையர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். விளையாட்டுத் தத்துவத்தைப் பரப்புவதில் ஆர்வமுள்ள அவர், பல பல்கலைக்கழகங்களில் விரிவுரையாற்றியுள்ளார். அத்துடன் ஒலிம்பிக் உலக நூலகம் உட்பட பல்வேறு பிரபலமான வெளியீடுகளில் 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளை அவர் வெளியிட்டுள்ளார். விளையாட்டு முகாமைத்துவ நிறுவனத்தில் இணை பேராசிரியராகவும் அவர் பணியாற்றி வருகிறார்.
ஒலிம்பிக், பொதுநலவாய விளையாட்டு விழா, ஆசிய விளையாட்டு விழா உட்பட பல்வேறு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றிய இலங்கை அணியின் தலைமை அதிகாரியாக கலாநிதி ஷெமால் பெர்னாண்டோ செயற்பட்டிருந்தார்.
விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகமாக கலாநிதி பெர்னாண்டோ நியமிக்கப்பட்டமை மிகவும் பொருத்தமானது என கூறப்படுகிறது. ஏனெனில் அவர் எண்ணற்ற பங்குதாரர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி, நாடு முழுவதும் விளையாட்டுத் திட்டங்களை மேம்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்கும் பொறுப்பாக இருப்பார். அவரது கல்வி சாதனைகள் மற்றும் அனுபவங்களுடன் சர்வதேச ஒலிம்பிக் குழு உட்பட சர்வதேச விளையாட்டுத்துறை சம்மேளனங்களிடமிருந்து இலங்கைக்கு நன்மை தரக்கூடிய விடயங்களை ஈட்டிக்கொடுப்பார் என நம்பப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM