பிறக்கின்ற ஒவ்வொருவருக்கும் இறைவனின் ஆசியும், அருளாசியும் உண்டு. அதனை அவர்கள் நேரடியாக வழங்காமல், உங்களுக்கான பிரத்யேக தேவதைகளின் மூலம் வழங்குவார்கள். இதனால் நாம் எமக்கான தேவதைகள் யாரென்று அறிந்து, அவர்களை தொடர்ந்து வணங்குவதன் மூலம் அவர்களின் ஆசிகளை பெற்று, வாழ்வில் நலம் பெறலாம்.
தேவதைகளின் ஆசிகளை பெறுவதற்கு சிறப்பான முறை - நாளாந்தம் காலையில் எழுந்தவுடன் அன்றைய திகதி, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றின் பெயர்களை உச்சரித்து, அதற்குரிய தேவதைகளை துதித்து, வணங்கி வந்தால்... எமக்கான தேவதைகளின் ஆசி கிடைப்பதுடன் கால தேவதைகளின் அருளும் கிடைக்கும்.
புண்ணிய நதிகளில் பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி , தேவதைகளை வழிபட்டாலும்... அவர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும்.
சிதிலமடைந்த ஆலயங்களை புனரமைப்பதுடன் அங்கு நீர் நிலைகளை உண்டாக்குவது அல்லது தண்ணீர் தொட்டி வைப்பது அல்லது ஆலயத்தின் தீர்த்த குளத்தை தூர்வாரி சீரமைப்பது அல்லது இது போன்ற பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு உடல் உழைப்பாலும்... பொருளாலும் உதவுவது... போன்ற செயல்களில் ஈடுபட்டால், தேவதைகளின் ஆசிகளை பெற்று வளமுடன் வாழ இயலும்.
பாழடைந்த அல்லது தொன்மையாகி பராமரிப்பின்றி கிடக்கும் சிவன் ஆலயத்திற்கு விளக்கேற்றுவது.. பிரதோஷ நாளில் சிவ ஆலயங்களுக்கு உங்களால் இயன்ற வரையிலான அபிஷேக பொருட்களை வாங்கித் தருவது... வெல்லத்துடன் பச்சரிசி மாவினை கலந்து சிவ ஆலயத்தின் பிரகாரத்தில் தூவி விடுவது.. போன்ற செயல்களில் ஈடுபட்டால், தேவதைகளின் பரிபூரண ஆசி கிடைப்பதுடன்.. தேவர்களையும் ப்ரீத்தி செய்தது போலாகிவிடும். இத்தகைய செயலால் எம்முடைய முன்னோர்களுக்கு மோட்ச பதவி கிட்டும் என்பது முன்னோர்கள் முன்மொழிந்த விடயம்.
மேற்கூறிய செயலை புரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பலன்கள் கிடைக்கும்.
தொகுப்பு சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM