காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு ஒருபோதும் மரணச்சான்றிதழ், நஷ்டஈட்டை பெற்றுக்கொள்ள நாங்கள் தயாரில்லை - மனுவல் உதயச்சந்திரா

Published By: Vishnu

14 Jul, 2023 | 04:14 PM
image

நாங்கள் ஒருபோதும் மரணச்சான்றுதல் மற்றும் நஷ்டஈட்டை பெற்றுக்கொள்ள தயார் இல்லை. ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு, உறவுகளுக்கு என்ன நடந்தது? நாங்கள் பணத்திற்காக இத்தனை வருடங்கள் வீதியில் நின்று போராடவில்லை என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் வியாழக்கிழமை(13) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலக அதிகாரிகள்(ஓ.எம்.பி) மரணச் சான்றிதழ் மற்றும் நஷ்டஈட்டை பெற்றுக்கொள்ளுமாறு கதைத்து பார்த்தனர்.

ஆனால் அந்த விடையம் சரிவரவில்லை. அதனை தொடர்ந்து ஒவ்வொரு அம்மாக்களையும் அழைத்து பேசி பார்த்தனர். அதுவும் சரி வரவில்லை.ஆனால் தற்போது அரச திணைக்களங்களை அழைத்து பேசுகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு மரண சான்றிதழ் மற்றும் நஷ்ட ஈடு வழங்கும் நடவடிக்கை ஒருபோதும் இடம் பெறாது.

குறித்த  மரண சான்றிதழ் மற்றும் நஷ்ட ஈடு எங்களுக்கு தேவை இல்லை என்பதை  ஓ.எம்.பி அலுவலக அதிகாரிகளுக்கு நாங்கள் தொடர்ந்தும் கூறி வருகின்றோம்.

பாதிக்கப்பட்ட எங்களுடன் கதைத்து பார்த்தார்கள் சரி வரவில்லை.தற்போது திணைக்களங்களை அழைத்து பேசி பார்க்கின்றார்கள். அதுவும் சரி வராது.நாங்கள் ஒரு போதும் அவர்களின் கோரிக்கைகளுக்கு ஒத்துப் போக மாட்டோம்.

நாங்கள் நீதியை யே கேட்டு நிற்கின்றோம்.எமது பிள்ளைகளுக்கு,உறவுகளுக்கு என்ன நடந்தது?,நாங்கள் பணத்திற்காக இத்தனை வருடங்கள் வீதியில் நின்று போராடவில்லை.

அவ்வாறு காசுக்காக போராடும் அம்மாக்களும் நாங்கள் இல்லை.ஓ.எம்.பி அலுவலக அதிகாரிகள் சகல விதத்திலும் எங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயன்றார்கள்.பயனளிக்கவில்லை.இந்த நிலையில் திணைக்கள அதிகாரிகள் ஊடாக எங்களிடம் பேச முற்படுகின்றனர்.

நாங்கள் ஒருபோதும் மரணச்சான்றுதல் மற்றும் நஷ்டஈட்டை பெற்றுக்கொள்ள தயார் இல்லை.

அரச திணைக்களத்தை வைத்து கதைக்கும் ஓ.எம்.பி அலுவலகத்தினர் மீண்டும் எங்களுடன் கதையுங்கள்.என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45