வரவு – செல­வுத்­திட்­டத்தில் குறிப்­பி­டப்­பட்­ட­துபோல் அத்­தி­ய­ாவ­சிய உணவுப் பொருட்கள் சில­வற்றை நிர்­ணய விலையில் விற்­பனை செய்ய முடி­யாது. எனவே, வரவு ‑ செலவுத் திட்­டத்­தி­னூ­டாக விதிக்­கப்­பட்­டுள்ள நிர்­ணய விலை­யினை உட­ன­டி­யாக நீக்க வேண்டும் என உண­வுப்­பொ­ருட்கள் இறக்­கு­ம­தி­யாளர் மற்றும் மொத்த வியா­பா­ரிகள் சங்கம் என்­பன நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­விடம் தெரி­வித்­துள்­ளன.

உலக வர்த்­தக சந்­தையில் குறித்த உணவுப் பொருட்­களின் விலை அதி­க­ளவில் உயர்ந்­தி­ருப்­ப­துடன், வரவு ‑ செல­வுத்­திட்­டத்தில் குறித்த உணவுப் பொருட்­க­ளுக்­கான இறக்­கு­மதி வரி குறைக்­கப்­ப­ட­வில்லை.

எனவே, அந்த உணவுப் பொருட்­களை இறக்­கு­மதி செய்து சந்­தைக்கு விடும்­போது நிர்­ணய விலையை விட அதி­க­ள­வான செலவு ஏற்­ப­டு­வ­தா­கவும் சங்­கத்தின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் தெரி­விக்­கின்­றனர்.

சீனி, பருப்பு, நெத்தலி, உழுந்து, கடலை ஆகிய உணவுப் பொருட்­களை இறக்­கு­மதி செய்­யும்­போது நிர்­ணய விலையை விட அதி­க­ள­வான செலவை இறக்­கு­ம­தி­யா­ளர்கள் எதிர்­கொள்­கின்­றனர்.

87 ரூபா­வாக விலை நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருக்கும் வெள்ளை சீனி ஒரு கிலோ கிரா­முக்கு 93 ரூபாவும், 169 ரூபா­வாக விலை நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருக்கும்.

பருப்பு ஒரு கிலோ கிரா­முக்கு 175 –‑ 180 ரூபா வரை­யிலும், 300 ரூபா­வாக விலை நிர்­ண­யிக்­கப்­ப­ட்டி­ருக்கும் உழுந்து ஒரு கிலோ கிரா­முக்கு 450 ரூபாவும், 410ரூபா­வாக விலை நிர்­ண­யிக்­கப்பட்­டுள்ள நெத்தலி ஒரு கிலோ கிரா­முக்கு 500 ரூபாவும் செல­வா­வ­தா­கவும் குறித்த சங்கம் மேலும் தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பின்னர் சமர்ப்­பிக்­கப்­பட்ட இடைக்­கால வரவு ‑ செல­வுத்­திட்­டத்தில் அத்­தி­ய­ாவ­சிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டது.

அத்துடன், கடந்த நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு ‑ செலவுத் திட்டத் திலும் உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.