எம்மில் பலரும் தங்களது பொருளாதார நிலை தன்னிறைவை பெற்ற பிறகு, வசதி வாய்ப்புகளையும், சௌகரியங்களையும் அதிகரித்துக் கொள்ளும்போது எம்மை அறியாமலே எமக்கு தோஷங்கள் ஏற்படுவதாக முன்னோர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஏனெனில் திசா புத்தி கரணநாதன் நாம யோகம் போன்ற பல காரணங்களால் எமக்கு திடீரென்று பொருள் வரவு அதிகரித்தால்... இதன் காரணமாக எம்மில் பலரும் தன்னிலை மறந்தும்.. கடந்த கால வரலாறு மறந்தும்... சில தவறுகளை செய்ய தொடங்கி விடுகிறார்கள்.
இதனால் ஏற்படும் நவகிரக தோஷங்களை ஜோதிட நிபுணர்களிடம் சென்று அறிவுரை பெற்று காசு செலவழித்து பரிகாரங்களை செய்த பின்னரும் மன நிறைவு அடைவதில்லை. இதனால் எம்மில் பலரும் தங்களது சம்பாத்தியம் வீணானது என்ற எண்ணத்தை உண்டாக்கி கொள்கிறார்கள்.
இதன் காரணமாகவே எம்முடைய முன்னோர்கள் நவகிரக தோஷங்கள் உங்களுக்கு இருப்பதாக கருதினால்.. அதனை நீங்களாகவே நீக்கிக் கொள்வதற்கான உபாயங்களையும் முன்மொழிந்திருக்கிறார்கள். அவை என்ன என்பதனை தொடர்ந்து காண்போம்.
திங்கள் கிழமைகளிலோ அல்லது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பசுவிற்கு வாழைப்பழம், கற்கண்டு பொங்கல் தானமாக கொடுத்து வந்தால்.. சந்திர பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் மறைந்து, அவரின் பரிபூரண ஆசி கிடைத்து எம்முடைய புகழ் மேலும் பெருகும்.
வசதியற்ற குடும்பத்தினரில் யாரேனும் இறந்து விட்டால்.. அவர்களின் இறுதி சடங்குகளை செய்வதற்கான செலவினை பணமாகவோ... பொருளாகவோ.. கொடுத்து உதவினால், சனி பகவானின் மறைமுக தோஷம் விலகி, அவரின் ஆசி கிடைத்து உங்களின் ஆயுளை அதிகரிக்கச் செய்யும்.
வேதம் படித்த பண்டிதர்கள்.. எமக்கு பாட சாலையில் பாடங்களை கற்பித்த ஆசிரியர்கள்.. சாதுக்கள்.. ஆகியோரை வணங்குவது மற்றும் புண்ணிய யாத்திரைக்கு செல்ல விரும்பி அவர்களுக்கு பொருளாதார பற்றாக்குறை ஏற்பட்டால் பொருள் உதவி செய்வது... குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது... போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வந்தால், குருவினால் ஏற்பட்ட சூட்சம தோஷம் மறைந்து அவரின் ஆசி கிடைத்து உங்களின் தன வரவை உயர்த்துவார்.
சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது... பசியால் தவிக்கும் உயிர்களுக்கு உணவளிப்பது.. கோவிலின் கோபுரத்தில் வைக்கப்படும் கலசத்திற்கு தங்கத்தை தானமாக தருவது... தொழுநோய் அல்லது குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியச் செலவு மற்றும் அவர்கள் உண்ண உணவு போன்றவற்றை அளித்தால்... சூரிய பகவானால் ஏற்பட்ட மறைமுக தோஷம் விலகி, அவரின் பரிபூரண ஆசியால் நல்ல ஆரோக்கியமும், வம்ச விருத்தியும் நிகழும்.
பூமிக்கு மரியாதை செய்தல்.. திருமணத்திற்காக காத்திருக்கும் ஏழைப் பெண்களுக்கு பொருளுதவி செய்தல்.. நாம் வாழும் வீட்டிற்கு உழைத்த தொழிலாளர்களை கைகளால் தொட்டு வணங்குவது... விலங்குகள், பறவைகள் போன்ற உயிர்களை வளர்ப்பது... உயிர் பலிகளை தவிர்ப்பது.. மருத்துவ செலவிற்கு பொருள் உதவி செய்வது...போன்ற விடயங்களில் தொடர்ச்சியாக நீங்கள் செயல்பட்டு வந்தால், செவ்வாய் பகவானின் ஆசியை பரிபூரணமாக பெற்று அஷ்ட சுகத்தையும் அனுபவிக்கலாம்.
பாடசாலையில் பயிலும் ஏழை மாணவ மாணவிகளுக்கு அவர்களின் கல்வி தொடர்பான உபகரணங்களையும், கட்டணங்களையும் செலுத்துவது.. குளிர்காலத்தில் ஏழை எளியவர்க்கு புதிய உடைகளை தானம் செய்வது.. போன்றவற்றை செய்து வந்தால், புத பகவானின் ஆசிகளை பெற்று தொழிலில் மேன்மை பெறலாம்.
சுக்கிர பகவானால் உங்களுக்கு தோஷம் ஏற்பட்டிருந்தால், நாளாந்தம் படுக்கை அறையில் உறங்க செல்வதற்கும் முன் நீங்கள் தலை வைத்து படுக்கும் திசைக்கு மேலே அதாவது உங்கள் தலைக்கு மேல் பகுதியில் ஒரு கோப்பையில் நீரை வைத்து விட்டு உறங்க வேண்டும். அந்த நீரை காலையில் எழுந்ததும் துளசி செடிகளுக்கும் அல்லது தொட்டா சிணுங்கி செடுகளுக்கு விட்டு விட வேண்டும். இதன் மூலம் சுக்கிர தோஷம் படிப்படியாக குறைந்து உங்களது தோற்றத்தில் கவர்ச்சி கூடும்.
நாகங்களை காணும் தருணங்களில் அதன் மீது தாக்குதல் நடத்தாமல் இருப்பது... பயணத்தின் போதோ அல்லது ஏதேனும் ஒரு தருணங்களில் இறந்த நாகத்தின் உடலை கண்டதும் அதனை தீயிட்டு கொளுத்துவது.. பஞ்ச மகா பாவங்களை செய்தவர்களுடன் நட்பு பாராட்டாமல் அவர்களிடம் இருந்து தள்ளி இருப்பது, அதாவது குடிகாரன், குரு துரோகி, பசுவை கொன்றவன், சண்டாளன்.. போன்றவர்களை நட்புக் கொள்ளாமல் தவிர்க்க வேண்டும். இவர்களை கண்டறிவது கடினம் என்றாலும், ஏதேனும் ஒரு தருணங்களில் தெரிந்த பிறகு நட்பை தொடர வேண்டாம். இப்படி செய்தால் ராகு மற்றும் கேதுவின் ஆசிகள் கிட்டும். இதன் ஊடாக அதிர்ஷ்டம் மற்றும் யோகம் ஆகியவை கிடைக்கப்பெற்று, சகல சௌபாக்கியங்களையும் அனுபவிக்க இயலும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM