சம்பியானாகும் குறிக்கோளுடனேயே விளையாடவுள்ளோம் - இலங்கை ஏ அணித் தலைவர் வெல்லாலகே

13 Jul, 2023 | 10:46 AM
image

(நெவில் அன்தனி)

எந்தவொரு கிரிக்கெட் சுற்றுப் போட்டியை எடுத்துக்கொண்டாலும் ஒவ்வொரு அணியும் சம்பியனாக வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே விளையாடும். நாங்களும் அந்த குறிக்கோளுடனேயே விளையாடவுள்ளோம் என ஆசிய கிரிக்கெட் பேரவை ACC) வளர்ந்துவரும் அணிகள் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் இலங்கை ஏ அணித் தலைவர் துனித் வெலலாலகே தெரிவித்தார்.

ACC வளர்ந்துவரும் அணிகள் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பாக கொழும்பு சினமன் க்ராண்ட் ஹோட்டலில் புதன்கிழமை (12) இரவு நடைபெற்ற ஊடக சந்திப்புக்குப் பின்னர் 'வீரகேசரி ஒன்லைன்' எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், 'போட்டிக்கு போட்டி சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடவுள்ளோம். ஒவ்வொரு போட்டியிலும் திறமையாக விளையாடினால் எண்ணிய இலக்கை அடையமுடியும் என நம்புகிறேன்' என்றார்.

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை இளையோர் அணிக்கு தலைவராக விளையாடி இப்போது வளர்ந்துவரும் அணிக்கு தலைமை தாங்குகின்றீர்கள். உங்களுக்கு கிடைத்துள்ள அணி குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் எனக் கேட்டபோது,

'எமது அணியில் நிறைய அனுபவசாலிகள் இருக்கின்றனர். பெரும்பாலான வீரர்கள் கழக மட்ட கிரிக்கெட் போட்டிகளில் தலைமை தாங்கியுள்ளனர். இத்தகைய ஓர் அணி எனக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி தருகிறது.

'எமது அணி சமபலம் கொண்ட அணி. எமது அணியில் துடுப்பாட்டம், பந்துவீச்சு, சகலதுறை என எடுத்துக்கொண்டால் திறமைசாலிகள் தாராளமாக இருக்கின்றனர். அணியில் இடம்பெறும் பெரும்பாலானவர்கள் துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் திறமைசாலிகள்.

'துடுப்பாட்டத்தில் குறிப்பாக அவிஷ்க பெர்னாண்டோ, மினோத் பானுக்க, பசிந்து சூரியபண்டார, வேகப்பந்துவீச்சில் சாமிக்க கருணாரட்ன, பினுர பெர்னாண்டோ, ப்ரமோத் மதுஷான், இசித்த சுழல்பந்துவீச்சில் சஹான் ஆராச்சிகே, துஷான் ஹேமன்த ஆகியோருடன் நானும் இடம்பெறுகிறேன். அந்த வகையில் எமது அணி சமபலம் கொண்டது என்று தான் கூறவேண்டும்' என பதிலளித்தார்.

இந்த சுற்றுப் போட்டியில் இலங்கை அணியின் வாய்ப்பு எத்தகையது என துனித் வெல்லாலகேயிடம் கேட்டபோது,

'இலங்கைக்கு வருகை தந்துள்ள சகல அணிகளும் திறமை வாய்ந்தவை என நான் கருதுகிறேன். எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. உலகக் கிண்ண தகுதிகாணில் அப்படிதான் நடந்தது. ஆகையால் பங்களாதேஷுடனான நாளைய (இன்று 13) போட்டியை சிறப்பாக ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கு எமது வீரர்கள் அனைவரும் தயாராக இருக்கின்றனர்' என்றார்.

உங்களைவிட மூத்த, அனுபசாலிளைக் கொண்ட அணிக்கு தலைமை தாங்குவது குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள் என அவரிடம் கேட்டபோது,

'நான் கொடுத்துவைத்தவன் என்று தான் கூறவேண்டும். என்னை விட மூத்த, அனுபவசாலிகள் அணியில் இடம்பெறுவது குறித்து நான் மிகவும் திருப்தி அடைகிறேன். அவர்களுடன் இணைந்து விளையாடுவது மிகவும் இலகுவானது. அனுபவசாலிகளைக் கொண்ட வீரர்கள் மத்தியில் தலைவராக விளையாடுவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எமது வீரர்கள் திறமையாக விளையாடி சாதிப்பர் என நம்புகிறேன்' என்றார்.

இது இவ்வாறிருக்க, 'வளர்ந்துவரும் அணிகள் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கையில் நடத்த கிடைத்தமை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைத்த பெருமை' என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உதவித் தலைவர் ரவின் விக்ரமரட்ன தெரிவித்தார்.

இந்த சுற்றுப் போட்டியின் விளையாடுவதன் மூலம் ஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளைச் சேர்ந்த இளம்வீரர்கள் சிறந்த அனுபவத்தைப் பெறுவர் என அவர் குறிப்பிட்டார்.

வளர்ந்துவரும் அணிகள் ஆசிய கிண்ணம் ஆரம்பம்

ஐந்தாவது   வளர்ந்துவரும் அணிகள் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கை ஏ அணிக்கும் பங்களாதேஷ் ஏ அணிக்கும் இடையில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் வியாழக்கிழமை (13) நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகிறது.

வளர்ந்துவரும் அணிகள் ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஏ குழுவில் ஆப்கானிஸ்தான் ஏ, பங்களாதேஷ் ஏ, ஓமான் ஏ, இலங்கை ஏ ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன.

பி குழுவில் இந்தியா ஏ, நேபாளம், பாகிஸ்தான் ஏ, ஐக்கிய அரபு இராச்சியம் ஏ ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன.

ஒவ்வொரு குழுவிலும் தலா 6 லீக் போட்டிகள் வீதம் மொத்தம் 12 லீக் போட்டிகள் ஜூலை 13ஆம் திகதியிலிருந்து ஜூலை 19ஆம் திகதிவரை நடைபெறும்.

ஜூலை 21ஆம் திகதி அரை இறுதிப் போட்டிகளும் ஜூலை 23ஆம் திகதி இறுதிப் போட்டியும் நடைபெறும்.

போட்டிகள் எஸ்.எஸ்.சி., சி.சி.சி., பி.சரா ஓவல், ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கு ஆகிய அரங்குகளில் நடைபெறும்.

Teams

Group A

Afghanistan A: Shahidullah Kamal (c), Ikram Alikhil (wk), Ishaq Rahimi (wk), Riaz Hassan, Ihsanullah Janat, Noor Ali Zadran, Zubaid Akbari, Bahir Shah, Allah Noor, Sharafuddin Ashraf, Izharulhaq Naveed, Wafadar Momand, Mohammad Ibrahim, Mohammad Saleem, Zia-ur-Rehman, Bilal Sami.

Bangladesh A: Saif Hassan (c), Zakir Hasan (vc & wk), Parvez Hossain Emon (wk), Akbar Ali (wk), Soumya Sarkar, Mahmudul Hasan Joy, Mahedi Hasan, Rakibul Hasan, Mrittunjoy Chowdhury, Tanzim Hasan Sakib, Ripon Mondol, Musfik Hasan, Naim Sheikh, Tanzid Hasan Tamim, Shahadat Hossain

Oman A: Aqib Ilyas (captain), Jatinder Singh, Kashyap Prajapati, Ayaan Khan, Shoaib Khan, Suraj Kumar (wicketkeeper), Jay Odedra, Kaleemullah, Fayyaz Butt, Samay Shrivastav, Wasim Ali, Rafiullah, Abdul Rauf (wicketkeeper), Shubo Pal, Muhammed Bilal Shah. 

Sri Lanka ‘A’ team (Subject to approval from the Sports Minister): Dunith Wellalage ( Capt ), Lasith Croospulle, Avishka Fernando, Minod Bhanuka (wk), Lahiru Udara, Janith Liyanage, Pasindu Sooriyabandara, Sahan Arachchige, Ashen Bandara, Dushan Hemantha, Promod Madushan, Chamika Karunaratne, Matheesha Pathirana.

Group B

India A: Yash Dhull (c), Abhishek Sharma (vc), Prabhsimran Singh (wk), Dhruv Jurel (wk), Sai Sudharsan, Nikin Jose, Pradosh Ranjan Paul, Nishant Sindhu, Manav Suthar, Yuvrajsinh Dodiya, Harshit Rana, Akash Singh, Nitish Kumar Reddy, Rajvardhan Hangargekar, Riyan Parag

Nepal: Rohit Paudel (c), Arjun Saud(wk), Aasif Sheikh (wk), Kushal Bhurtel, Gulsan Jha, Sompal Kami, Pratish GC, Dev Khanal, Sandeep Jora, Kushal Malla, Lalit Rajbanshi, Bhim Sharki, Pawan Sarraf, Surya Tamang, Kishor Mahato, Shyam Dhakal.

Pakistan A: Mohammad Haris (c & wk), Omair Yousuf (vc), Amad Butt, Arshad Iqbal, Haseebullah Khan, Kamran Ghulam, Shahnawaz Dahani, Mehran Mumtaz, Mubasir Khan, Mohammad Wasim Jr, Qasim Akram, Sahibzada Farhan, Saim Ayub, Sufiyan Muqeem, Tayyab Tahir

UAE A: Ali Naseer (captain), Adithya Shetty, Aryansh Sharma, Ansh Tandon, Ashwanth Valthapa, Ethan D' Souza, Fahad Nawaz, Jash Giyanani, Jonathan Figy, Lovepreet Singh, Matiullah, Mohammad Faraazuddin, Muhammad Jawadullah, Nilansh Keswani and Sanchit Sharma.

ACC Emerging Teams Men's Asia Cup 2023 Fixtures

July 13 Thursday Sri Lanka A vs Bangladesh A A SSC 10 AM

July 13 Thursday Afghanistan A vs Oman A - A CCC 10 AM

July 14 Friday India A vs UAE A - B SSC 10 AM

July 14 Friday Pakistan A vs Nepal - B CCC 10 AM

July 15 Saturday Bangladesh A vs Oman A - A SSC 10 AM

July 15 Saturday Sri Lanka A vs Afghanistan A - A CCC 10 AM

July 17 Monday Pakistan A vs UAE A - B P Sara 10 AM

July 17 Monday India A vs Nepal - B RPICS 2 PM

July 18 Tuesday Bangladesh A vs Afghanistan A - A P Sara 10 AM

July 18 Tuesday Sri Lanka A vs Oman A - A RPICS 2 PM

July 19 Wednesday Nepal vs UAE A - B P Sara 10 AM

July 19 Wednesday Pakistan A vs India A - B RPICS 2 PM

July 21 Friday 1st Semi Final - P Sara Oval 10 AM

July 21 Friday 2nd Semi Final - RRICS  2 PM

July 23 Sunday Final - RPICS 2 PM

(படப்பிடிப்பு: எஸ். சுரோந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குசல் பெரேராவுக்குப் பதில் நிரோஷன் திக்வெல்ல

2024-03-01 22:47:20
news-image

ரசிகர்களை கோபமூட்டிய ரொனால்டோவுக்கு ஒரு போட்டித்தடை,...

2024-03-01 17:22:29
news-image

ஆஸி. வீரர் க்றீன் ஆட்டம் இழக்காமல்...

2024-03-01 16:18:07
news-image

டெல்ஹியின் வெற்றியில் கெப், ஜொனாசன், ஷஃபாலி...

2024-03-01 15:05:04
news-image

ஒலிம்பிக் விழாவுக்கான பாதுகாப்பு திட்டங்களைக் கொண்ட...

2024-02-29 20:04:27
news-image

பங்களாதேஷுடனான தொடர்களில் திறமையை வெளிபடுத்த முடியும்...

2024-02-29 14:55:53
news-image

பங்களாதேஷுடனான முதல் இரண்டு ரி20 போட்டிகளில்...

2024-02-28 23:55:46
news-image

பொதுநலவாய செஸ் போட்டியில் இலங்கைக்கு ஒரு...

2024-02-28 21:19:17
news-image

ஒரு நூற்றாண்டுக்கு முன் பாரிஸ் நகரில்...

2024-02-28 17:19:56
news-image

றோயல் செலஞ்சர்ஸுக்கு இலகுவான வெற்றி

2024-02-28 13:57:45
news-image

கெப், ராதா பந்துவீச்சிலும் லெனிங், ஷஃபாலி...

2024-02-27 17:50:51
news-image

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வெற்றிகளைப்பெற்று அசத்தும்...

2024-02-27 16:51:10