(எம்.ஆர்.எம்.வசீம்)
கல்வித் துறையில் அனைத்து சேவைகளிலும் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுப்போம். இது தொடர்பாக தற்போது கலந்துரையாடப்பட்டு வருகிறது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டத்தில் கல்வி ஆராேக்கியத்தின் அபிவிருத்திக்காக அதிபர்களை அறிவுறுத்தும் நிகழ்ச்சிட்டத்தில் புதன்கிழமை (12) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
தொழில் திறமை விருத்தியடைவது காலம் கடந்த அறிவால் அல்ல. மாறாக நிகழ்நிலைப்படுத்தப்பட்ட தொழிநுட்பத்தை அடிப்படையாக்கொண்ட புதிய அறிவாகும்.
மிகவும் குறிய கால வரையறைக்குள் வேகமாக அறிசு இரட்டிப்பாகும் உலகில் செயற்கை அறிவுடன் மோதுவதற்கு ஏற்படும் எதிர்கால தொழில் வாழ்க்கை வெற்றிகொள்ளவதாக இருந்தால் நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் இருந்தே குறைவாக இருக்கும் மனித வளங்களை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்துகொண்டு சிறந்த சேவை ஒன்றை பெற்றுக்கொள்ளவேண்டும்
அத்துடன் எதிர்வரும் தினங்களில் வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வந்ததன் பின்னர் முன்னர் நடத்துவதற்கு இருந்த பட்டதாரி ஆசிரியர் பரீ்ட்சை திட்டமிட்ட பிரகாரம் நடத்தி, பெறுபேறுகளின் பிரகாரம் அந்த பட்டதாரிகள் மாகாண மட்டத்தில் நேர்முக பரீட்சையின் பிரகாரம் ஆசிரியர்களாக இணைத்துக்கொண்ட பின்னர் தற்போதுள்ள ஆசிரிய் பற்றாக்குறை பெரும்பாலும் நீங்கிவிடும்.
அதன் பின்னர் ஆசிரியர் சமநிலை நிகழ்நிலைப்படுத்தப்பட்டு பாடசாலை கட்டமைப்பின் முகாமைத்துவ வியூகமமும் பலப்படுவதன் காரணமாக அதன் நிர்வாக நடவடிக்கைகள் இலகுவாகும்.
அதேநேரம் பாடசாலை முகாமைத்துவத்துக்கு தேவையான மனித வளங்களும் போதுமானளவில் கிடைக்கும் என நம்புகிறோம்.
அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்குள் கல்வி துறையில் அனைத்து சேவைகளிலும் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்காக ஆழமான மட்டத்தில் கலந்துரையாடல் நடத்தப்படுவதுடன் தற்போதும் குறித்த தொழிற்சங்கங்களுடன் மிகவும் சினேகபூர் மட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற சிந்தனையை முன்னுக்கு கொண்டு வந்து பாடசாலைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM