சட்டத்தினால் மாத்திரம் சமூக சீரழிவை தடுக்க முடியாது ; நீதி அமைச்சர் விஜயதாச

Published By: Vishnu

12 Jul, 2023 | 05:22 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் மேல் நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளில் நூற்றுக்கு 33வீதம் சிறுவர் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளாகும்.

அதனால் சீரழிந்து வரும் எமது சமூகத்தை சட்டத்தினால் மாத்திரம் சரியான வழிக்கு கொண்டுவர முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து சமூக நலன்கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் அனுமதிக்கப்பட்டதுடன் பழைய குற்றங்களுக்காக நடவடிக்கை எடுக்க முடியாது என சிலர் தெரிவிக்கின்றனர். அது முற்றிலும் பிழையான கருத்தாகும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

1500 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரத்தினபுரி புதிய நீதிமன்ற கட்ட தொகுதியை திறந்துவைக்கும் நிகழ்வு நேற்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இற்றைக்கு ஓராண்டுக்கு முன் எமது நாடு நீதி இல்லாத அராஜக நாடாக மாறி இருந்தது.. நாடு பொருளாதாரீதியிலும் வீழ்ச்சியடைந்திருந்தது.

எல்லா வகையிலும் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை தற்போதைய ஜனாதிபதி உட்பட அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

கடந்த வருடம் ஜூன் மாதத்தில் நூற்றுக்கு 90ஆக இருந்த பணவீக்கம் இந்த வருடம் ஜூன் மாததில் நூற்றுக்கு 4வரை குறைவடையும் என யாரும் நினைக்கவி்ல்லை., எனறாலும் தற்போதைய ஜனாதிபதியின் தலைமையின் கீழ் நாடு சட்ட ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் முன்னிக்கு வந்திருக்கிறது.

மேலும் நாங்கள் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்ற்ததுக்கு சமர்ப்பித்து இரண்டாம் மதிப்பீட்டை அனுமதித்துக்கொண்டுள்ளோம்.தற்போது இருக்கும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு பதிலாக அதிகாரங்களுடன் கூடிய புதிய ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிப்போம்.

அரசதுறை போன்று  தனியார் துறையில்  நடக்கும் ஊழல், மோசடிகளைக் குறைப்பதற்கு தேவையான அதிகாரம்  ஆணைக்குழவுக்கு உண்டு. பெண்களிடம் பாலியல் லஞ்சம் வாங்குவதை கிரிமினல் குற்றமாக கருதி சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான  அதிகாரம் இந்த புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் ஊடாக வழங்கி இருக்கிறோம். 

அத்துடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வழங்குவதை வழக்கம் போல் மேற்கொள்ளப்பட்டாலும்,அது தொடர்பில்  கண்காணிக்க வழிமுறை ஒன்று இருக்கவில்லை  என்றாலும் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்தை அனுமதித்துக்கொண்டதுடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை கண்காணிக்கும் அதிகாரத்தை வழங்கி இருக்கிறோம். 

மேலும் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் அனுமதிக்கப்பட்டதுடன் பழைய குற்றங்களுக்காக நடவடிக்கை எடுக்க முடியாது என சிலர் தெரிவிக்கின்றனர். அது முற்றிலும் பிழையான கருத்தாகும். புதிய சட்டம் தொடரபாக தெளிவில்லாதவர்களே இவ்வாறான கூற்றுக்களை தெரிவித்து வருகின்றனர்.

நமது நாட்டின் நீதித்துறையில் லஞ்சம் மற்றும் ஊழல் காரணமான வழக்குகள் லட்சக்கணக்கில் இருந்து வருகின்றன. இந்த நிலையை குறைப்பதற்காக பல நூறுவருடங்கள் பழைமைவாய்ந்த நொத்தாரிஸ் கட்டளைச் சட்டம், மோசடிகளை தடுக்கும் கட்டளைச் சட்டம் போன்ற சட்டங்களை திருத்துவதற்காக நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டை பலப்படுத்துவதற்காக கடந்த ஒருவருட காலத்துக்குள் 30 புதிய சட்டமூலங்களை அனுமதித்துக்கொள்ள நடவடிக்கை எடுத்தோம்.

நாட்டில் ஒட்டுமொத்த நீதிமன்ற கட்டமைப்புக்குள் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் தொடர்பான 24700 வழக்குகள் இருக்கின்றன. நாட்டில் மேல் நீதிமன்றங்களில் இருக்கும் 29700 வழங்குகளில் 9800 வழங்குகள் அதாவது நூற்றுக்கு 33வீதம் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமான வழங்குகள் என கணக்கிடப்பட்டிருக்கின்றன.

அதனால் இந்த நிலைமை தொடர்பில் நாங்கள் கவலைப்பட வேண்டும்.  தவறு செய்பவர்களுக்கு நாங்கள் தண்டனையை பெற்றுக்கொடுப்பதைவிட அவர்களை குற்றச்செயல்களில் இருந்து மீட்பதற்கு செயற்பட வேண்டும்.

நாட்டில் நிலவும் சமூக சீரழிவை குறைக்க மத தலைவர்களும் கிராம தலைவர்களும் முன்னுரிமை வழங்க வேண்டும். சமூகத்தை சரியான வழிக்கு கொண்டுவருவதற்காக சட்டத்தினால் மாத்திரம் நடவடிக்கை எடுக்க முடியாது. அதனால் அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூட்டணியில் இணைவதற்கு மாத்திரமே ஐ.தே.க.வுக்கு அழைப்பு...

2025-01-21 17:51:59
news-image

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை பெருந்தோட்ட...

2025-01-21 15:50:37
news-image

சிலாபத்தில் ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாக...

2025-01-21 19:48:20
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் துணைபோக மாட்டோம்...

2025-01-21 17:44:21
news-image

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் முன்வைத்த...

2025-01-21 15:51:17
news-image

அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களை நாட்டுக்கு பயனளிக்கும்...

2025-01-21 19:47:28
news-image

ஈழத்தமிழர் பிரச்சினைக்கான ஒற்றைத்தீர்வை உடனடியாக யாராலும்...

2025-01-21 22:42:17
news-image

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் சபையில்...

2025-01-21 22:34:09
news-image

மஹிந்தவின் வீட்டை அரசாங்கம் பெற்றுக்கொண்டால் அவருக்கு...

2025-01-21 17:47:47
news-image

சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின...

2025-01-21 15:51:54
news-image

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் உரிமை...

2025-01-21 17:31:09
news-image

பாராளுமன்ற உறுப்பினர் எவருக்கும் அதி சொகுசு...

2025-01-21 17:42:13