நிதி வங்குரோத்து தொடர்பில் 3 மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிப்போம் - சரித ஹேரத்

Published By: Vishnu

12 Jul, 2023 | 02:59 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய்வதற்கு பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியசவம் தலைமையில் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது.

நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் எதிர்வரும் மூன்று மாதகாலத்துக்குள் நாட்டு மக்கள் அறிந்துக் கொள்ளும் வகையில் அறிக்கை சமர்ப்பிப்போம் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

தலவதுகொட பகுதியில் புதன்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார பாதிப்புக்கு தீர்வு கண்டு விட்டோம் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார். கடன் பெறாமல் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் எந்த புதிய திட்டங்களையும் அரசாங்கம் செயற்படுத்தவில்லை. மாறாக கடன் பெற்று தற்காலிக தீர்வு எட்டப்பட்டுள்ளது.

நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய்வதற்கு பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. குழு ஒருமுறையேனும் கூடவில்லை.ஆனால் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளார்கள்.

சாகர காரியவசம் தலைமையில் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது.நிதி முகாமைத்துவம் மற்றும் வெளிநாட்டு கடன் ஸ்திரப்படுத்தல் தொடர்பில் துறைசார் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் நான்காம் திகதி கோப் குழு தீர்மானித்தது,நான் அப்போதைய கோப்குழுவின் தலைவராக பதவி வகித்தேன்.

மக்கள் போராட்டத்தை தொடர்ந்து கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகினார்.ரணில் விக்கிரமசிங்க 2022.07.20 ஆம் திகதி பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.2022.07.22 ஆம் திகதி ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார். இதனால் பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் அனைத்தும் செயலிழந்தன.

நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய்வதற்கு அவதானம் செலுத்தியவர்கள் தற்போதைய கோப் குழுவுக்குள் உள்வாங்கப்படவில்லை.2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நாட்டின் நிதி நிலைமை மற்றும் தவறான தீர்மானங்கள் தொடர்பில் கணக்காளர் நாயகம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு தற்போது செயற்பட வேண்டும்.

நிதி வங்குரோத்த நிலை தொடர்பில் ஆராய தீர்மானித்துள்ளோம்.பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து அதற்கான பணிகளை நாளை மறுதினம் (15) திகதி முதல் முன்னெடுப்போம்.2010 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலங்களை உள்ளடக்கிய வகையில் விசாரணைகளை முன்னெடுப்போம்.நிதி நிலைமை தொடர்பில் இன்னும் 03 மாதகாலத்துக்குள் மக்கள் அறிந்துக் கொள்ளும் வகையில் அறிக்கை வெளியிடுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:37:53
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07
news-image

தோட்டப்புற வீடுகளுக்கு மின்இணைப்பை பெறுவதற்கான முறைமையை...

2025-03-14 16:32:13
news-image

மின்சாரக்கட்டணத்தை மூன்று வருடங்களில் 30 சதவீதம்...

2025-03-14 14:48:16