தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாவுக்கும் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பிரித்தானிய கிளை உறுப்பினர்களுக்குமிடையில் கலந்துரையாடல்

Published By: Vishnu

12 Jul, 2023 | 02:16 PM
image

தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான,  கோவிந்தன் கருணாகரம் ( ஜனா ) தலைமையில் ரெலோ, புளொட், மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன்  பிரித்தானிய கிளையின் நிர்வாக உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இடம் பெற்றது.

லன்டன் ஹரோவில் அமைந்துள்ள கலந்துரையாடல் மண்டபம் ஒன்றில்  ஞாயிறு (09/07/23) அன்று சுமார் இரண்டுமணி நேர ஆக்கபூர்வமான  கலந்துரையாடல்  ஒன்று இடம் பெற்றது.

இவ் நிகழ்வானது இலங்கையில்  இருந்து வருகை தந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான கோவிந்தன் கருணாகரம் ( ஜனா ) தலைமை தாங்க  தமிழீழ விடுதலை இயக்கம் பிரித்தானிய கிளை சார்பாக  சாம், ரூபன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பிரித்தானிய கிளை சார்பாக சிவபாலன், அல்வின்,  முகுந்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை  முன்னணி சார்பாக பிரபு,  பரமேஸ், சஜீ அவர்களும் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலானது ஒரு நிமிட மெளன அஞ்சலியுடன் ஆரம்பமானது. தொடர்ந்து  பாராளுமன்ற உறுப்பினர் ஜனா அவர்களால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசு கட்சி வெளியேறிய பின் மீண்டும், புதிதாகவும் இனைந்த கட்சிகளுடன் உருவான புதிய கூட்டின் இன்றைய கள நிலவரங்கள், யாப்பு, நிர்வாக  கட்டமைப்பு, எதிர்கால  வேலைத் திட்டங்கள், புலம்பெயர்  நாடுகளில் ஆற்ற வேண்டிய வேலைத்திட்டங்கள், அடுத்த ஆண்டில் சந்திக்க போகும்  தேர்தல்கள், தலைமை காரியாலயம் தொடர்பான விடயங்கள், மற்றும் நிதி தொடர்பான விடயங்கள்  என பல விடயங்கள் தெரிவிக்கபட்டது.

அவற்றை உள்வாங்கிய உறுப்பினர்கள் அதற்கான தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தமது கேள்விகளையும் முன் வைத்து பதில்களையும் ஏற்றுக்கொண்டனர்.

இக் கூட்டத்தில் பங்கு பற்றிய உறுப்பினர்களே பிரித்தானியாவின் தமிழ் தேசிய கூட்டமைப்பின்  நிர்வாக குழு உறுப்பினர்கள் என்றும்இ ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் வருகை தராததால் அடுத்த கூட்டத்தில் அவர்களையும்  உள் வாங்கி நிர்வாக கட்டமைப்பை  தெரிவு செய்தல் என்ற முடிவு எக  மனதாக ஏற்றுக கொள்ளப்பட்டு  மிகவும் பெறுமதி வாய்ந்த கலந்துரையாடலாக நிறைவேறியது.

இக் கலந்துரையாடலுக்கு வருகை  தந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜனா அவர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரித்தானிய கிளை சார்பாக மனமார்ந்த  நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் எமக்கு சவால் அல்ல...

2025-02-16 20:42:03
news-image

பிரதான பிரச்சினைகளை மறந்து யு.எஸ்.எயிட் சர்ச்சையை...

2025-02-16 16:53:51
news-image

இந்திய மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்கள்...

2025-02-16 23:04:15
news-image

ஐ.தே.க. - ஐ.ம.ச. கூட்டணி பேச்சுவார்த்தைகளிலிருந்து...

2025-02-16 20:41:19
news-image

ஐக்கிய மக்கள் மக்கள் சக்தி -...

2025-02-16 20:52:46
news-image

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பணவீக்கம்...

2025-02-16 16:20:02
news-image

சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை கடத்திச் சென்ற...

2025-02-16 21:42:35
news-image

முல்லைத்தீவிற்கு வருகை தந்த பிரதமர்; ஏமாற்றமடைந்த...

2025-02-16 21:44:11
news-image

அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் சக்தியாக மீண்டும்...

2025-02-16 21:30:13
news-image

வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு

2025-02-16 21:17:06
news-image

யாருக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதனாலே உள்ளூராட்சி...

2025-02-16 19:59:52
news-image

பொதுச்செயலராக சுமந்திரன் நியனம்: இலங்கைத் தமிழரசுக்...

2025-02-16 21:27:42