பிர­பல பொப்­பா­டகர் என்ரிக் இக்­னே­சி­யஸின் '' செக்ஸ் அன்ட் லவ்'' இசை நிகழ்ச்­சியில் களி­யாட்ட வரி­யாக செலுத்­தப்­பட வேண்­டிய இரண்டு கோடியே 91 லட்­சத்து 25 ஆயிரம் ரூபாவை கொழும்பு மாந­கர சபைக்கு செலுத்த இசை நிகழ்ச்­சியை ஒழுங்கு செய்த கிரிக்கெட் வீரர்­க­ளான குமார் சங்­கக்­கார மற்றும் மஹேல ஜய­வர்­தன ஆகி­யோ­ருக்கு சொந்­த­மான நிறு­வ­னத்­துக்கு ஒரு வார கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக மேயர் முஸம்மில் தெரி­வித்­துள்ளார். இந்த இசை நிகழ்ச்­சிக்கு அதிக விலைக்கு அனு­ம­திச்­சீட்­டுகள் விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளன. சம்­பந்­தப்­பட்ட நிறு­வன முகா­மை­யாளர் தம்­முடன் இந்த வரி தொடர்­பாக இணக்­கப்­பாட்­டுக்கு வரா­விட்டால் சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படுமெனவும் மேயர் தெரிவித்துள்ளார்.