உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் செயற்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் - திஸ்ஸ அத்தநாயக்க

Published By: Vishnu

11 Jul, 2023 | 08:24 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

கலைக்கப்பட்டிருக்கும் உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் செயற்படுத்து தொடர்பில் பாராளுமன்றததுக்கு சமர்ப்பித்திருக்கும் தனிநபர் பிரேரணைக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். 

அது தொடர்பில் சட்ட பிரிவுகளுக்கு ஆலாேசனை வழங்கி இருக்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தி பராாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கலைக்கப்பட்டிருக்கும் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகளை மீண்டும் கூட்டுவது தொடர்பில் பொதுஜன பெரமுன உறுப்பினர் கயந்த கெட்டகொடவினால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் தனிநபர் பிரேரணை குறித்து கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு தனிநபர் பிரேரணைகளை கொண்டுவந்து கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் செயற்படுத்துவதற்கு முயற்சிக்கிறது. இது பிழையான நடவடிக்கையாகும்.

மக்கள் குறிப்பிட்டதொரு கால எல்லைக்கு அதிகாரம் வழங்கி இருந்தார்கள். அந்த காலவரையறை முடிவடைந்த பின்னரும் அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு உளளூராட்சி மன்றங்களை மீண்டும் செயற்படுத்த முயற்சிப்பதாக இருந்தால் அது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகவே நாங்கள் காண்கிறோம். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு நாங்கள் எதிர்ப்பு.

அதனால் உளளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறே நாங்கள் தெரிவிக்கிறோம். தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு எந்த காரணமும் தற்போது இல்லை. 

ஏனெனில் கையிருப்பில் இருக்கவேண்டிய தொகையை விட இருப்பதாக திறைசேரி தெரிவித்திருக்கிறது. அப்படியானால் மக்களின் வாக்குரிமையை இல்லாமல் செய்ய எந்த அதிகாரிக்கும் உரிமை இல்லை.

அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது முறையற்ற செயலாகும். அதனால் அரசாங்கத்தின் இந்த யோசனைக்கு நாங்கள் எதிர்ப்பு. அதனால் அரசாங்கம் தேர்தலை நடத்தி, மக்கள் தங்களுக்கு விருப்பமான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்துகொண்டு உள்ளூராட்சி மன்றங்களை அமைத்துக்கொள்வதற்கு இடமளிக்க வேண்டும்.

அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களை மீீள செயற்படுத்துவது அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைக்கு எதிராக  நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதற்கு நாங்கள் தயாராகி இருக்கிறோம். குறிப்பாக அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் இருப்பது தொடர்பில் நாங்கள் நீதிமன்றம் சென்றிருக்கிறோம்.

நாங்கள் மாத்திரமல்ல  வேறு அரசியல் கட்சிகளும் நீதிமன்றம் சென்றிருக்கின்றன. அதேநேரம் இந்த பிரேரணைக்கும் நாங்கள் எதிர்ப்பு. அதனால் இதற்கு எதிராகவும்  நாங்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்ல எதிர்பார்த்திருக்கிறோம். இது தொடர்பில் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக  சட்ட பிரவுகளுக்கு ஆலாேசனை வழங்கி இருக்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உறுதி...

2024-06-13 22:29:31
news-image

ரணிலின் வேலைத்திட்டமே சர்வதேச நாணய நிதியத்தின்...

2024-06-13 16:48:39
news-image

பயங்கரவாதிகள் போல் செயற்படுவதை எதிர்க்கட்சிகள் தவிர்க்க...

2024-06-13 16:54:47
news-image

கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்புக்கு...

2024-06-13 20:54:34
news-image

நாளை 2 மணிக்குள் சாதகமான பதிலின்றேல்...

2024-06-13 17:35:08
news-image

நுவரெலியாவில் உடலின் கீழ் பகுதி இல்லாமல்...

2024-06-13 20:19:38
news-image

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய...

2024-06-13 19:53:18
news-image

இரு முச்சக்கர வண்டிகள் நேருக்குநேர் மோதி...

2024-06-13 19:07:27
news-image

'கிழக்கை மீட்போம்' என மட்டக்களப்பை சூறையாடியவர்கள்...

2024-06-13 23:13:45
news-image

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த...

2024-06-13 17:36:34
news-image

பஸ்ஸர - பதுளை வீதியில் விபத்து...

2024-06-13 23:19:30
news-image

மன்னாரிலும் தபால் தொழிற்சங்கத்தினர் சுகயீன போராட்டம்

2024-06-13 17:34:27