ஆசிய கிண்ண போட்டிகள் பாகிஸ்தானிலேயே நடைபெற வேண்டும்: பாகிஸ்தான் அமைச்சர்

Published By: Sethu

11 Jul, 2023 | 05:45 PM
image

இவ்வருட ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி பாகிஸ்தானில் மாத்திரமே நடைபெற வேண்டும் எனவும், இப்போட்டிகளில் இந்திய அணியும் பாகிஸ்தானிலேயே விளையாட வேண்டும் எனவும் பாகிஸ்தானின் மாகாணங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு அமைச்சர் இஷான் உர் ரெஹ்மான் மஸாரி கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கிண்ணப் போட்டிகளில் இந்தியா மறுப்பு தெரிவித்தது. இதனால், 4 போட்டிகளை மாத்திரம் பாகிஸ்தான் நடத்தவும் ஏனைய 9 போட்டிகளையும் இலங்கையில் நடத்தவும் ஆசிய கிரிக்கெட் பேரவை தீர்மானித்தது.

இந்நிலையில், பாகிஸ்தானில் மாத்திரமே இப்போட்டிகள் நடைபெற வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட நிலைப்பாடு என பாகிஸ்தானின் மாகாணங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு அமைச்சர் இஷான் உர் ரெஹ்மான் மஸாரி கூறியுள்ளார். இவ்வமைச்சே பாகிஸ்தானின் விளையாட்டுத்துறை அமைப்புகளுக்கு பொறுப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

"பாகிஸ்தானே இப்போட்டிகளுக்கான வரவேற்பு நாடு. அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானிலேயே நடைபெற வேண்டும். ஹைபிரிட் முறையை நான் விரும்பவில்லை"  என அவர் கூறியுள்ளார். 

தென் ஆபிரிக்காவின் டேர்பன் நகரில் நடைபெறவுள்ள ஐசிசி மாநாட்டில் இவ்விடயம் ஆராயப்படலாம் எனவும்  அமைச்சர் மஸாரி  கூறியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22
news-image

டெல்ஹியுடனான போட்டியில் லக்னோவுக்கு சொந்த மண்ணில்...

2024-04-13 07:02:37
news-image

RCBயை பந்தாடி சரிமாரியாக ஓட்டங்களைக் குவித்து...

2024-04-12 00:55:47
news-image

மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண்...

2024-04-11 17:40:44
news-image

அப்ரிடிக்கு மேலும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்...

2024-04-11 10:37:32
news-image

கடைசிப் பந்தில் வெற்றியை சுவைத்தது குஜராத்...

2024-04-11 01:10:42
news-image

40 வயதுக்குட்பட்ட, 40 வயதுக்கு மேற்பட்ட ...

2024-04-11 00:32:22
news-image

தந்தை பிறந்த மண்ணில் சர்வதேச கிரிக்கெட்...

2024-04-10 20:09:20
news-image

லங்கா பிறீமியர் லீக்கில் வெளிநாட்டு வீரர்களைப்...

2024-04-10 18:01:30
news-image

மழையினால் வீண் போனது தஸ்மின் ப்றிட்ஸின்...

2024-04-10 15:45:53