(பா.ருத்ரகுமார்)

ஊடகவியலாளர்கள் வீதிகளில் படுகொலைசெய்யப்பட்டபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கண்ணீர் எங்கே இருந்தது? என கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி. ஹரிசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த ரணிலுடன் இணைவோம்” என்ற தொனிப்பொருளில் அநுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இப்போது கண்ணீர் வருகிறது. ஊழல் மோசடித் தொடர்பில் விமல் வீரவன்ச சிறையில் அடைக்கப்பட்டார். இதன்போது அவரின் மகள் கண்ணீர் விட்டு அழுதார் என்று அவரின் மகளின் கண்ணீர் பற்றி பேசுகின்றனர். ஆனால், அந்த காலத்தில், ஊடகவியலாளர்களை வீதியில் வைத்து படுகொலை செய்தபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கண்ணீர் எங்கே இருந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.