daily ft
ஜூலை 2022 இன் முக்கியமான நிகழ்வுகளின் முதலாம் வருடத்தை இந்த வாரம் குறித்து நிற்கின்றது.
அவ்வேளை ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச அவரது ஆட்சிக்கு எதிராக நாடாளாவிய ரீதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து
ஒரு திருடனை போல நள்ளிரவில் நாட்டிலிருந்து வெளியேறினார்.
இந்த சம்பவங்கள் இடம்பெற்று ஒரு வருடத்தின் பின்னர் ஆட்சிமுறையில் திட்டமிட்ட மாற்றங்கள் -ஊழல்- மனித உரிமைமீறல் உட்பட - ஏனைய குற்றங்களுக்கு பொறுப்பு கூறப்படுதல், இலங்கை வரலாற்றில் புதிய அத்தியாயம் போன்ற கனவுகள் கலைந்துள்ளன.
தனது குடும்பத்தினர் வாழும் அமெரிக்காவிற்கு பாதுகாப்பாக பயணிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட கோட்டாபய ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டிற்கு அலைந்து திரிந்த பின்னர் செப்டம்பர் 2022 இல் இலங்கை வந்தார்.
அதன் பின்னர் அவர் பொறுப்புக்கூறல் தொடர்பான எந்த நடவடிக்கைகளையும் எதிர்கொள்ளவில்லை.
நாட்டின் பொருளாதாரத்தை சிதறடித்த தனது பொருளாதார குற்றங்களுக்காகவும், யுத்த குற்றங்கள்- பத்திரிகையாளர்கள் படுகொலை -இராணுவத்திற்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதில் ஊழல் போன்ற தனது முன்னைய குற்றங்களுக்காக அவர் பொறுப்புக்கூறலை எதிர்கொள்ளவில்லை.
பொருளாதாரத்தை கையாண்டவேளை அவரால் ஏற்பட்ட துயரங்களுக்கு அப்பால் கோட்டாபய ராஜபக்ச நிர்வாகம் பலருக்கு தனிப்பட்ட தீமைகளை இழைத்தது.
சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகர போலி குற்றச்சாட்டுகளின் கீழ் 11 மாதங்கள் சிறைவைக்கப்பட்டார்.மேல்முறையீட்டு நீதிமன்றம் பின்னர் இந்த குற்றச்சாட்டுகளை சோடிக்கப்பட்டவை என தெரிவித்திருந்தது.
அபயசேகர இலங்கையின் மிகவும் பிரபலமான புலனாய்வாளர்.சிறையிலிருந்தவேளை கொவிட் மற்றும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்.அவருக்கு உரிய மருத்துவவசதிகளை வழங்குமாறு அவரது சட்டத்தரணிகளும் வெளிநாடுகளும் பரப்புரையில் ஈடுபடவேண்டியிருந்தது.
ராஜபக்சாக்களுடன் தொடர்புபட்ட குற்றங்கள் உட்பட பல குற்றங்களை கண்டுபிடித்த பொலிஸ் உத்தியோகத்தரை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றன,சிஐடியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் தங்கள் வேலையை உரிய விதத்தில் செய்தமைக்காக இடமாற்றப்பட்டனர்,துன்புறுத்தப்பட்டனர் பழிவாங்கப்பட்டனர்.
சட்டத்தரணிகள் இராஜதந்திரிகள் அரசாங்க உத்தியோகத்தர்கள் அந்த வருடங்களில் கோட்டாபய ராஜபக்சவின் சீற்றத்திற்குள்ளானமைக்காக பலியானார்கள் .
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் சூழமைவில் மாத்திரம்கோட்;டாபய ராஜபக்ச குற்றமிழைத்ததாக குற்றம்சாட்டப்படவில்லை,சிங்கள இளைஞர்களின் 19889-89 எழுச்சியின் போது இடம்பெற்ற பாரிய படுகொலைகளில் கோட்டாபயவிற்கு தொடர்புள்ளமைக்கான ஆதாரங்கள் அதிகரிக்கின்றன.
1989ம் ஆண்டு இரத்தக்களறி மிக்க கிளர்ச்சியின்போது தான் இராணுவ அதிகாரியாக பணிபுரிந்த பகுதிகளில்காணப்பட்ட மனித புதைகுழிகள் குறித்த ஆதாரங்களை கோட்டாபய ராஜபக்ச எப்படி சிதைத்தார் என்பது குறித்த புதிய அறிக்கையை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
மாத்தளையில் காணப்படும் பாரிய மனித புதைகுழி கோட்டாபய அந்த பகுதியின் இராணுவ அதிகாரியாக பதவிவகித்த காலத்தை சேர்ந்தது,அவர் அக்காலப்பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரானபல நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
கொல்லப்;பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும் அவர்களது உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கும் இதுவரை எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை.
அரகலயவின் நினைவுகள் மங்கிக்கொண்டிருக்கின்ற -அந்த போராட்டத்தின் அபிலாசைகள் மறக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் -நாட்டிற்கு பேரழிவையும் துன்பத்தையும் கொண்டுவந்த தனிநபர்கள் பதவிகளில் நீடிக்கின்ற இந்ததருணத்தில் இலங்கைக்கு ஒரு புதிய தொடக்கத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பை தோற்றுவித்தஅந்த தருணங்களை மாத்திரம் எங்களால் நினைத்து பார்க்க முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM