கேகாலையில் அமைந்துள்ள போகல சுரங்கம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for சுரங்கம் virakesari

கடும் மழையின் காரணமாக மண்மேடு சரிந்தமையால் சுரங்கத்தினுள் பணியாற்றிக்கொண்டிருந்த சுரங்க தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை சுரங்கம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், போகல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவரே உயிரிழந்திருந்ததுடன், மற்றைய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இதேவேளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.