நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைந்து கொள்வதற்கு துருக்கி சம்மதம் தெரிவித்துள்ளது.
நேட்டோவில் புதிதாக நாடுகள் அங்கத்தும் பெறுவதற்கு ஏற்கெனவே அங்கத்துவம் வகிக்கும் அனைத்து நாடுகளினதும் சம்மதம் தேவை.
எனினும், நேட்டோவில் சுவீடன் அங்கத்துவம் பெறுவதற்கு துருக்கி சம்மதம் தெரிவிக்க மறுத்து வந்தது. குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு சுவீடன் அடைக்கலம் கொடுத்தமையே இதற்குக் காரணம்.
ஹங்கேரியும் சுவீடனின் அங்கத்துவத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
இது தொடர்பாக பல மாதங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்தன.
இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை சுவீடனின் நேட்டோ அங்கத்துவத்துக்கு துருக்கி ஜனாதிபதி ரெஜெப் தையிப் ஏர்துவான் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த அங்கீகாரம் துருக்கிய பாராளுமன்றத்தினாலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
நேட்டோ அமைப்பின் உச்சிமாநாடு லித்துவேனியாவில் இன்று நடைபெறவுள்ள நிலையில் துருக்கி இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
இச்செய்தியினால் தானட மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக சுவீடனின் பிரதமர் உல் கிறிஸ்டர்ஸ்சன் தெரிவித்துள்ளார். நேட்டோவின் 32 ஆவது நாடாக சுவீடன் இணையவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM