bestweb

காஷ்மீரில் சுற்றுலா மறுமலர்ச்சி

10 Jul, 2023 | 05:17 PM
image

(ஏ.என்.ஐ)

இவ்வருடம் ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூன் 19ஆம் திகதி வரை 15,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காஷ்மீர் பள்ளத்தாக்குடன் மீண்டும் இணைந்துள்ளனர். இதனால் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரித்துள்ளது என்று இந்திய துறைசார் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உலகின் பல பாகங்களில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகையால் காஷ்மீரின் சுற்றுலாத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

சுற்றுலாத்துறையின் அதிகாரபூர்வ அறிக்கைகளின்படி, மேற்படி கால இடைவெளியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15,161ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு பதிவுகளை விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டுகிறது. அதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு 4,028 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாத்திரமே வருகை தந்துள்ளனர்.

காஷ்மீரில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் ஆர்வத்தை மீண்டும் தூண்டுவதில் பல காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முதலாவதாக, பிராந்தியத்தில் மேம்பட்ட பாதுகாப்பு நிலைமை மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை பயணிகளிடையே நம்பிக்கையை அதிகரிப்பதில் முக்கியமாகிறது.

பாதுகாப்பான மற்றும் வரவேற்கத்தக்க சூழலை உருவாக்க உள்ளூர் நிர்வாகம் மற்றும் பாதுகாப்புப் படைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் பலனளித்துள்ளன. ஏனெனில், சுற்றுலாப்பயணிகள் இப்போது பள்ளத்தாக்கை மிகவும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணிகள் உணர்கிறார்கள்.

அரசாங்கமும் சுற்றுலாத்துறையும் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் சுற்றுலாவை ஊக்குவிப்பது ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. கூட்டு பிரச்சாரங்கள் மற்றும் உலகளாவிய சுற்றுலா நிகழ்வுகளில் பங்கேற்பது காஷ்மீரை கட்டாயம் பார்க்கவேண்டிய இடமாக முன்னிறுத்த உதவியது. பள்ளத்தாக்கு வழங்கும் அழகிய இயற்கை அழகு, பல்வேறு கலாச்சார பாரம்பரியம் மற்றும் தனித்துவமான அனுபவங்களும் அதன் கவர்ச்சிக்கு பங்களித்துள்ளன.

பனி படர்ந்த மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகள், அமைதியான ஏரிகள் மற்றும் வளைந்து நெளிந்து செல்லும் ஆறுகள் உள்ளிட்ட பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகளிலேயே காஷ்மீரின் கவர்ச்சி உள்ளடங்கியுள்ளது. 

அந்த வகையில், ஸ்ரீநகரில் அமைந்துள்ள கம்பீரமான தால் ஏரி, சுற்றுலாப் பயணிகளின் சின்னமான ஷிகாரா படகு சவாரிகள், பாரம்பரிய படகுகள், துடிப்பான மிதக்கும் சந்தைகளை சுற்றுலாப் பயணிகள் இனிதே அனுபவிக்கவும் வாய்ப்புள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த ஐநா...

2025-07-10 11:35:24
news-image

செங்கடல் பகுதியில் கப்பல் மீது ஹெளத்தி...

2025-07-10 09:31:21
news-image

இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கியதில்...

2025-07-09 15:47:59
news-image

சர்வதேச நீதிமன்றத்தினால் தேடப்படும் பெஞ்சமின் நெட்டன்யாகு...

2025-07-09 14:48:18
news-image

விமான நிலையத்தில் காலணிகளை அகற்றத் தேவையில்லை...

2025-07-09 14:39:14
news-image

குஜராத் வதோதராவில் பாலம் இடிந்து விபத்து:...

2025-07-09 14:26:13
news-image

இந்திய தாதி பிரியாவிற்கு 16ம் திகதி...

2025-07-09 13:54:57
news-image

100 வயதை கடந்த கம்பீரம்’ -...

2025-07-09 12:41:46
news-image

அமெரிக்காவின் டெக்சாஸில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 160...

2025-07-09 12:21:38
news-image

பிரான்ஸின் மார்சேயில் பாரிய காட்டுத் தீ...

2025-07-09 12:42:03
news-image

பெண்களிற்கு எதிரான ஒடுக்குமுறை- தலிபான் தலைவர்களிற்கு...

2025-07-09 10:33:49
news-image

இந்தோனேசியாவில் எரிமலை குமுறல் ; சாம்பல்...

2025-07-08 15:24:25