bbc
Anbarasan Ethirajan
உதேனி கலுதந்திரி என்ற 54 வயது துறைமுகப்பணியாளர் கடந்த வருடம் தனது தொழிலுடன் தொடர்பில்லாத விடயத்திற்காக பிரபலமானார்.
இலங்கையில் ஜனாதிபதி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்த மறுநாள் அவர் அங்குள்ள கட்டிலில் இலங்கையின் தேசியகொடியுடன் உறங்கும் வீடியோ வெளியாகியிருந்தது.
இளைஞர்கள் அங்குள்ள நீச்சல்தடாகத்திற்குள் குதிப்பதையும் ஆடம்பர கட்டிலில் உறங்குவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் ஏற்கனவே சர்வதேச அளவில் பரவியிருந்தன.
இலங்கையின் மில்லியன் கணக்கான மக்கள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் ஊழல் நிறைந்த திறமையற்ற நிர்வாகம் குறித்து எவ்வளவு தூரம் விரக்தியடைந்துள்ளனர் என்பதை காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் வரிசையில் களுதந்திரியின் வீடியோவும் சேர்ந்து கொண்டது.
ராஜபக்ச நாட்டிலிருந்து தப்பியோடி சில நாட்களின் பின்னர் பதவியை இராஜினாமா செய்தவேளை அது முன்னொருபோதும் இல்லாத மக்கள் இயக்கத்திற்கு பாரிய வெற்றி என பாராட்டப்பட்டது-
ஆனால் ஒருவருடத்தின் பின்னர் இலங்கை முற்றிலும் வித்தியாசமானதாக காணப்படுகின்றது.
மக்கள் போராட்டம்
2022 இல் இலங்கையில் பணவீக்கம் என்றும் இல்லாத உச்சத்தை தொட்டதுஅந்நியசெலாவணி முற்றாக தீர்ந்துபோனதுநாட்டில் எரிபொருள் மருந்து உணவு போன்றவைகள் முற்றாக இல்லாமல் போன நிலை உருவானதுஇலங்கை சுதந்திரத்தின் பின்னர் எதிர்கொண்ட மிகமோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் 13 மணிநேர மின்வெட்டை எதிர்கொண்டனர்.
பலர் இந்த நிலைமைக்கு ராஜபக்சவும் அவரது குடும்பத்தினருமே காரணம் என கருதினர்அவரது பேரழிவை ஏற்படுத்திய பொருளாதார கொள்கைகள் நாட்டில் அந்நியசெலாவணி நெருக்கடியை ஏற்படுத்திய அதேவேளை ராஜபக்ச குடும்பம் ஊழலில் ஈடுபடுகின்றது பொதுமக்கள் பணத்தைமுறைகேடாக பயன்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டுகளும் வெளியாகின.
எனினும் ராஜபக்சாக்கள் தாங்கள் தவறு செய்யவில்லை என நிராகரித்ததுடன் வேறு சூழ்நிலைகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினர்- ரஸ்யா உக்ரைன் மீது தாக்குதலை மேற்கொண்டதால் சுற்றுலாப்பயணிகள் வருகையில் பாரிய வீழ்ச்சி போன்றன காரணங்களை முன்வைத்தனர்.
காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டங்களிற்காக மக்கள் ஒன்றுதிரண்டவேளை நான் கொழும்பிலிருந்தேன்ஆர்ப்பாட்டங்கள் பகலிலும்இரவிலும் தொடர்ந்தனமாலைவேளைகளில் குடும்பங்களுடன் பலர் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர். மாணவர்கள்இமதகுருமார்கள் அருட்சகோதரிகள் பௌத்தமதகுருமார்.
கோட்டா கோ ஹோம் என்ற கோசத்துடன் ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் பரவின – சிங்கள தமிழ் முஸ்லீம் சமூகத்தை முதல் தடவை ஒன்றிணைத்தன.
சில வாரங்களிற்கு பின்னர் அவை முன்னொருபோதும் இல்லாத சம்பவங்களாக மாறினஇராஜபக்சாக்களை வெளியேற்றும் நோக்கத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தனர்அவர்களில் களுதந்திரியும் ஒருவர்ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே நுழைந்தவேளை ராஜபக்ச அங்கிருக்கவில்லைஇஅதனால் அவர்கள் ஜனாதிபதி மாளிகையை தங்கள் வீடுகளாக மாற்றினர்.நினைவுப்பொருட்களாக படுக்கை விரிப்பு முதல் புத்தகங்கள் வரை எடுத்துக்கொண்டனர்.
அரசாங்க உத்தியோகபூர்வ இலச்சினைகள் போன்றவை இல்லாமல் கோட்டபாயவினால் இயங்கமுடியாது என்பதால் நான் அவற்றை எடுத்துச்சென்றேன் என களுதந்திரி தெரிவித்தார்.
இலங்கையின் கொடிகள் ஒவ்வொரு ஜனாதிபதிக்கும் தனித்துவமானவைபுதியவர் ஒருவர் பதவியேற்க்கும் ஒவ்வொரு முறையும் அதன் வடிவம் மாறும்.
ஐந்து நாட்களின் பின்னர் ராஜபக்ச நாட்டிலிருந்து தப்பியோடினார் சிங்கப்பூரில் தஞ்சம்புகுந்தார் அங்கிருந்து இராஜினாமா கடிதத்தை அனுப்பினார்
இது அரகலயவிற்கான வெற்றியாக கருதப்பட்டது
ராஜபக்ச குடும்பத்தின் வீழ்ச்சி என்பது சில மாதங்களிற்கு முன்னர் வரை நினைத்துப்பார்க்க முடியாத விடயமாக காணப்பட்டது.அரசியல்ரீதியில் வலுவானவர்களாக காணப்பட்ட அந்த குடும்பத்தினர் 2009 இல் விடுதலைப்புலிகளை தோற்கடித்தமைக்காக பிரபலமானவர்களாக கருதப்பட்டவர்கள் .
ஆனால் ஒருவருடத்தின் பின்னர் தற்போது ஆர்ப்பாட்டக்காரர்களே நெருக்கடியில் சிக்கியுள்ளனர்இ அதேவேளை பொதுமக்களின் வெறுப்பிற்குள்ளான ராஜபக்சாக்களும் ஏனைய அதிகாரிகள் அரசியல்வாதிகளும் மீண்டும் நாட்டிற்கு திரும்பியுள்ளனர் பதவிகளில் உள்ளனர்.
அடக்குமுறை
ராஜபக்ச நாட்டிலிருந்து தப்பியோடிய பின்னர் அனுபவமுள்ள அரசியல்வாதியான ரணில்விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தினால் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். மிகப்பெரும் பெரும்பான்மையை கொண்டிருந்த ராஜபக்ச கட்சி அவருக்கு ஆதரவளித்தது.
எனினும் ரணில்விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதும் அவர் காலிமுகத்திடலில் காணப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு இராணுவத்தினரை பயன்படுத்தினார்இராணுவத்தினர் அந்த பகுதியில் திடீர் நடவடிக்கையை முன்னெடுத்து கூடாரங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்களின் ஏனைய பொருட்களையும் அகற்றினர் .
களுதந்திரி பொலிஸில் சரணடைந்தார் ஜனாதிபதியின் கொடியை அவமதித்தமைக்காக 21 நாட்கள் சிறையில்அடைக்கப்பட்டார்.
அவருக்கு எதிரான வழக்குகள் தொடர்கின்றன
எனக்கு எந்த வருத்தமும் இல்லை நான் எனது மக்களி;ற்காக நாட்டிற்காக இதனை செய்தேன் என்கின்றார் அவர்
அவர் இரண்டுமாதங்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.
கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகச்செய்தோம் எனினும் புதிய அரசியல் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்த முடியவில்லை - இதுவே அவருடைய ஒரேயொரு கவலையாக காணப்படுகின்றது.
மௌனமாக்கப்பட்ட குரல்கள்
அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டவர்களில் ஒருவர் வசந்த முதலிகே - இடதுசாரி செயற்பாட்டாளர் - அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் .
முதலிகே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு ஐந்து மாதங்கள் சிறையில்அடைக்கப்பட்டார்.
நீதிமன்றம் என்ற ஒன்று இல்லாவிட்டால் நான் தற்போதும் சிறையிலேயே இருந்திருப்பேன் - மக்களை ஒடுக்குவதன் மூலம் உண்மையான விடயங்களை அரசாங்கத்தினால் ஒடுக்க முடியாது எனவும் களுதந்திரி தெரிவித்தார்.
தமிழில் ரஜீபன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM