பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலம் நீடிப்பு

Published By: Digital Desk 3

10 Jul, 2023 | 11:09 AM
image

(இராஜதுரை ஹஷான்)

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பரிந்துரைக்கு அமைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் பதவி காலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல்  அமுலுக்கு வரும் வகையில் மேலும் மூன்று மாதங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன 2020 நவம்பர் மாதம் 27 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன கடந்த பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி சேவையில் இருந்து ஓய்வுப்பெற்றார்.

36 ஆவது பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் மும்முனை போட்டி நிலவிய பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி சி.டி.விக்கிரமசிங்கவின் பதவி காலத்தை மூன்று மாதங்களுக்கு நீடித்தார்.

மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும்,கறைபடியாத ஒருவரை பொலிஸ்மா அதிபராக நியமிக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்,மத மற்றும் சிவில் அமைப்புக்கள் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தியுள்ளன.

பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்ட மூன்றுமாத கால பதவி நீடிப்பு நிறைவடைந்த நிலையில் புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

இவ்வாறான பின்னணியில் புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அழஸிற்கும், அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சி.டி.விக்கிரமரத்னவின் பதவி காலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி வரை நீடித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:33:27
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு பெல்ஜியம்...

2024-03-03 16:45:13
news-image

'அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு' துணைபோகும் இரட்டை...

2024-03-03 16:11:58
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதில்...

2024-03-03 15:55:24
news-image

மட்டக்களப்பு - நாவலடியில் விபத்து :...

2024-03-03 15:42:03
news-image

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் தாக்குதல்: மூவர் படுகாயம்,...

2024-03-03 15:29:44
news-image

சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியை மறித்த...

2024-03-03 15:12:34
news-image

சாந்தனின் புகழுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

2024-03-03 15:01:07
news-image

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை...

2024-03-03 14:46:29
news-image

யாழில் நடுக்கடலில் கறுப்புக்கொடி ஏந்தி கடற்றொழிலாளர்கள்...

2024-03-03 14:48:37