(லியோ நிரோஷ தர்ஷன்)

வீதிகளில் கூச்சலிடுவதால் தேசிய அரசாங்கத்தின் திட்டங்களை முடக்க முடியாது எனவே கூட்டு எதிரணிக்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் வாய்ப்புகள் தற்போதும் உள்ளது.

அதனால் உத்தேச அரசியலமைப்பு விவகாரத்தினை மக்களிடத்தில் திரிபு படுத்தி காட்டி தவறான அர்தங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதை கூட்டு எதிரணி நிறுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

Image result for துமிந்த திஸாநாயக்க, மஹிந்த virakesari

வீதிகளின் சந்திகளில் கூச்சலிடுபவர்களுக்கு அஞ்சி அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்திற்கான திட்டங்களையோ அபிவிருத்தி இலக்குகளையோ விட்டு பின்வாங்காது. அனைவருக்கும் எம்முடன் இணைந்து செயற்பட வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் எப்போதும் உண்டு என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்பு விவகாரம் என்பது இன்னும் பேச்சுமட்டத்தில் காணப்படுகின்ற ஒரு விடயமாகும். அதற்கு எதிராக குரல் எழுப்புகின்றவர்கள் அர்த்தமற்ற வகையில் கூச்சலிடுகின்றனரே தவிர ஆக்கபூர்வமான பங்களிப்புகள் எதனையும் அவர்கள் செய்வதில்லை.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்றும் தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வை எட்டுவதற்கு அனைத்து தரப்பினர்களுடனும் வெளிப்படையான பேச்சுக்களை முன்ெனடுத்து வருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.