AI நமது வேலைவாய்ப்பை பறித்து விடும் என நினைப்பது தவறானது என மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தொழிநுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள எனப்படும்AI செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் தினந்தோறும் உருவாகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் மூலம் சமீபத்தில் உருவான தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பல்கலைகழகத் தேர்வு உச்சநீதிமன்ற விசாரணை விதவிதமான ஆடைகளுடன் தோன்றுதல் வாட் ஆப்பில் பதில் அனுப்புதல் இன்ஸ்டாகிராம் என எல்லாவற்றிலும் AI ன் உதவியுடன் ஆச்சரிப்பட தக்க வகையில் புதிய சாதனைகளை பலர் உருவாக்கி வருகிறார்கள்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து மின்னணு மற்றும் தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அளித்த பேட்டில் தெரிவித்துள்ளதாவது..
“செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நமது வேலைவாய்ப்பை பறித்துவிடும் என சொல்வது முட்டாள்தனம் . 1999ம் ஆண்டு ஒரு செய்தி பரவியது. 2000ம் ஆண்டிற்கு பிறகு உலகத்தில் எங்கேயும் மனிதர்களுக்கு வேலையே இருக்காது எனச் சொன்னார்கள்.
ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் உருவாகும்போதும் மக்கள் நமது வேலைவாய்ப்பு பறிபோய்விடும் என பேசுவது வழக்கம்தான். அதனடிப்படையில் தான் தற்போதுAI தொழில்நுட்பத்தை பற்றியும் சொல்கிறார்கள்.
AIதொழில்நுட்பம் தற்போது உலக அளவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா விரைவில் செமிகண்டக்டர் ஆராய்ச்சி துறையில் முக்கியமான இடத்தை பெரும். சீனா 30 வருடங்கள் ஆராய்ச்சி செய்து தோல்வியுற்றதை இந்தியா அடுத்த 10 ஆண்டுகளில் செய்து முடிக்கப் போகிறோம்.
சீனா கடந்த 15 ஆண்டுகளில் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை செமி-கண்டக்டர் தொழிலை உருவாக்க முயற்சித்தது. ஆனால் இன்று அவர்களிடம் எந்த முன்னேற்றமும் இல்லை “ என மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM