யாழ். மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான செ.திருச்செல்வம் 7 நிமிடங்கள் 48 செக்கன்களில் 1550 கிலோ கிராம் எடை கொண்ட ஊர்தியை 400 மீற்றர் தூரம் தனது தாடியால் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார்.
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (09) பிற்பகல் யாழ். மட்டுவில் ஐங்கரன் சன சமூக நிலைய முன்றலில் இந்த சாதனை நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தொழிலதிபர் அ.கிருபாகரன் கலந்துகொண்டார். மேலும், சிறப்பு அதிதிகளாக சமூக சேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி, ஈ.சிற்றி ஆங்கில கல்லூரியைச் சேர்ந்த றஜீபன் ஆகியோரும் அதிதிகளாக பன்னாட்டு எம்.ஜி.ஆர் பேரவைத் தலைவர் ம.விஜயகாந்த், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தி.தங்கவேலு, ஊடகவியலாளர் முகுந்தன், சாதனையாளரின் நண்பன் தையிட்டி இ.சிவானந்தம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
சோழன் உலக சாதனை புத்தக நிறுவன இலங்கை கிளை தலைவர் யோ.யூட் நிமலன், சந்திரபுரம் கிராம அலுவலர் சுபாசன் ஆகியோரும் சாதனை படைக்கும் நிகழ்வில் இணைந்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM