மீண்டும் வட்டி வீதங்கள் குறைப்பு ; என்ன நடக்கும்?

Published By: Digital Desk 3

10 Jul, 2023 | 10:38 AM
image

ரொபட் அன்டனி

மத்திய வங்கியினால் செய்யப்பட்டிருக்கின்ற மதிப்பீடுகளின் பிரகாரம் மீண்டும் வட்டி வீதங்கள்  குறைக்கப்பட்டுள்ளன.அதாவது மத்திய வங்கி நாட்டின் வங்கி கட்டமைப்புக்காக  நிர்ணயிக்கின்ற   வட்டி வீதங்கள் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளன.   வைப்புக்கள் மற்றும் கடன்களுக்கான வட்டிவீதங்கள் முறையே 11 மற்றும் 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன.  இதுவரை முறையே 13 சதவீதமாகவும், 14 சதவீதமாகவும் காணப்பட்ட துணைநில் வைப்புவசதிவீதம் மற்றும் துணைநில் கடன்வசதிவீதம் என்பன மேலும் 200 அடிப்படைப்புள்ளிகளால் முறையே 11 சதவீதம் மற்றும் 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன.  

எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிகத்துரிதமான பணவீக்க வீழ்ச்சி உள்ளிட்ட அண்மையகால நிலைவரம் மற்றும் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் இதனூடாக நடுத்தர காலத்தில் பணவீக்கத்தை ஒற்றை இலக்கப்பெறுமதிக்குக் கொண்டுவருவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது என்று  மத்திய வங்கி அறிவித்துள்ளது. மேலும், இந்த நாணயக்கொள்கைத் தளர்வின் ஊடாகக் கிடைக்கப்பெறும் நன்மையை பொதுமக்களுக்கும் வணிகங்களுக்கும் பெற்றுக்கொடுக்குமாறும் வங்கி மற்றும் நிதியியல் துறையிடம் மத்திய வங்கி வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. 

பொருளாதாரத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்?  

மத்திய வங்கியின் வட்டி வீதங்கள் குறைப்பானது பொருளாதாரத்தை பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.  காரணம் மத்திய வங்கி  வங்கி கட்டமைப்புக்கான வட்டி விகிதங்களை  அதிகரிக்கும்போது அது நாட்டின் பொருளாதாரத்தை சுருங்குவதற்கு ஏதுவாக அமையும். 

மறுபுறம் வட்டி விகிதங்களை குறைக்கும்போது அது பொருளாதாரம் விரிவடைவதற்கான சந்தர்ப்பத்தை கொடுக்கும்.      மத்திய வங்கியை பொறுத்தவரையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான மிக முக்கிய கருவியாக வட்டி வீதங்கள் அதிகரிப்பை அவ்வப்போது பயன்படுத்தி வந்திருக்கின்றது.       நாட்டின் மத்திய வங்கியின் மிக முக்கியமான கடமையாக நோக்கமாக இருப்பது நாட்டின் விலை ஸ்திரத்தன்மையை மற்றும்  நிதி ஸ்திரன்மையை உருவாக்குவதாகும்.  இந்த இரண்டுமே மத்திய வங்கியின் பிரதான கடமைகளாக பொறுப்பாக காணப்படுகின்றன. 

வாழ்க்கைச் செலவு உயர்வு

அந்த வகையில் எப்போதெல்லாம் நாட்டின் பொருட்களின் விலை அதிகரிக்கின்றதோ? அதாவது பணவீக்கம் அதிகரிக்கின்றதோ, அப்போது மத்திய வங்கி தலையிட்டு பணவீக்கத்தை குறைப்பதற்கு   நடவடிக்கை எடுக்க வேண்டும்.   அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு   நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பாரிய சுமையை மக்களுக்கு ஏற்படுத்தியது.   வாழ்க்கைச் செலவு உயர்வடைந்தது.    பொதுவான பணவீக்கம் 80 வீதமாகவும் உணவு பணவீக்கம் 90 வீதமாகவும் உயர்வடைந்தது. 

வாழ்க்கைச் செலவு உயர்வு காரணமாகவே கடந்த காலங்களில் வறுமை  அதிகரித்தது.  லேர்னேசியா அமைப்பு செய்திருந்த  வறுமை தொடர்பான ஆய்வில் 14 வீதமாக 2019 ஆம் ஆண்டு காணப்பட்ட வறுமை வீதம் தற்போது 31 வீதமாக அதிகரித்துள்ளது.  

30 இலட்சம் காணப்பட்ட வறிய  மக்களின் எண்ணிக்கை 70 இலட்சமாக அதிகரித்துள்ளது.      வாழ்க்கைச் செலவு உயர்வடைந்தமையே இதற்கு காரணமாகும்.  அதாவது மக்களினால் தமது சம்பளம் மற்றும் வருமானத்தைக் கொண்டு தமது குடும்பத்தினரின் பொருளாதார தேவையை நிறைவேற்ற முடியாத நிலை காணப்பட்டது.  

இந்த கட்டத்திலேயே கடந்த வருட இறுதியிலிருந்து பல மறுசீரமைப்பு வேலை திட்டங்கள் அரசாங்கத்தினால்  முன்னெடுக்கப்பட்டன.   சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன. இன்னும் தொடர்கின்றன. 

அதனடிப்படையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கடந்த வருடம் மத்திய வங்கி வட்டி விகிதங்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தது.  2022 ஆம் ஆண்டில் வட்டி வீதமானது கிட்டத்தட்ட 8 மற்றும் 9 வீதமளவிலேயே காணப்பட்டது.  ஆனாலும் மத்திய வங்கி 2022 ஆம் ஆண்டு நாடு வங்குரோத்து  அடைந்ததாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் வட்டி வீதங்களை அதிகரித்தது.

அதிகரிப்பால் பாதிக்கப்பட்ட சிறிய வர்த்தக முயற்சிகள் 

வைப்புக்களுக்கு 15.5 வீதமாகவும் கடன்களுக்கு 16.5 வீதமாகவும் கடந்த காலங்களில் வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டன.  கடந்த ஒரு வருட காலமாக வட்டி  வீத  அதிகரிப்பினால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக  முயற்சியாளர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டனர்.  

முக்கியமாக  வங்கிகளில் கடன்களை பெற்று வர்த்தகங்களை செய்து கொண்டிருக்கின்ற தரப்பினர் வட்டி வீத  அதிகரிப்பினால் கடுமையான நெருக்கடிகள் எதிர்கொண்டனர்.  கடன் மற்றும் வட்டி தவணைப்பணம் மிக அதிக அளவில் அதிகரித்து காணப்பட்டது. இதனை சமாளிக்க முடியாமல் கடந்த காலங்களில் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும் நாணய மாற்று வீதத்தில் ஸ்திர தன்மையை பேணுவதற்கும் மத்திய வங்கி தொடர்ச்சியாக வட்டி வீதங்களை அதிகரித்த நிலையிலேயே பேணி வந்தது. 

வட்டி வீத குறைப்பு என்ன நன்மை தரும்? 

வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளமையானது    சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களை  பொறுத்தவரை  புதிய கடன்களை பெற்று வர்த்தகங்களை செய்யக்கூடிய நிலைமை ஏற்படும் நிலைமை உருவாகி இருக்கின்றது. அதாவது வட்டி வீதம் குறையும் போது மக்கள் வங்கிகளில் இருக்கின்ற பணத்தை மீளப்பெறுவார்கள்.  காரணம் வட்டி குறைவு என்பதால் பணத்தை வங்கியில் வைப்பு செய்யாமல் வேறு ஏதாவது தொழில் துறையில் முதலீடு செய்வதற்கு மக்கள் முயற்சிப்பார்கள்.  

அதேபோன்று புதிய கடன்களை மக்கள் வங்கிகளில் பெறுவார்கள்.  காரணம் வங்கி கடன்களுக்கான வட்டி வீதம் குறைவாக இருக்கும்.  இந்த சூழலில் வங்கிகளில் இருக்கின்ற பணம் மக்களின் கைகளை நோக்கி நகரும்.      வட்டி குறையும்போது நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள் புதிய கடன்களை பெற்று தமது தொழிலை விரிவு படுத்துவார்கள்.  அதனால் தொழில் வாய்ப்புக்கள், மக்களின் வருமானம் அதிகரிக்கும்.  அதாவது  வட்டி வீதம் குறையும்போது பொருளாதாரம்  விரிவடையும்.     இது பொருளாதாரத்துக்கு ஆரோக்கியமானதாகவே பார்க்கப்படுகின்றது. 

ஆனால் வட்டி வீதங்கள் மீண்டும் 2  வீதத்தனால்  மட்டுமே குறைக்கப்பட்டிருக்கின்றன. இது போதுமானதல்ல.  உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் வட்டி வீதம் இன்னுமே அதிகமாகவே உள்ளது. 

கடன் தவணைப்பணம் குறையுமா? 

இதேவேளை   வட்டி வீத குறைப்பானது மக்களின் கடன் தவணை பணத்தை குறைக்குமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.  மக்கள் பெற்றுள்ள     கடன்களுக்கான வட்டி வீதங்கள் மிதக்கும்  வகைகளின் பெறப்பட்டிருந்தால்  தவணைப்பணம்  குறைவடையும்.  ஆனால் நிரந்தர வட்டி வீத தன்மையில்   கடன்களை பெற்றிருந்தால் தற்போது இந்த வட்டி வீத குறைப்பு  கடன் தவணைப்பணத்தை குறைக்காது. ஆனால் எதிர்வரும் காலங்களில் மக்கள் பெறப்போகும் கடன்களுக்கான  வட்டி குறைவடையும். இதுவே இதன் பொருளாதார தாக்கமாக காணப்படுகின்றது. 

எப்படியோ தற்போது வட்டி வீதங்கள் குறைவடைந்து வருவதால் பொருளாதாரம் விரிவடைய ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. முக்கியமாக சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியளர்கள் தனது வர்த்தக செயற்பாடுகளை விரிவுபடுத்தும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.  வர்த்தக செயற்பாடுகள் விரிவடைந்து தொழில் வாய்ப்புகள் உருவாகும்.  மக்களின் வருமானம் அதிகரிக்கும்.  நாட்டின் பொருளாதாரம் பரந்துபட்ட ரீதியில் முன்னெடுக்கப்படும்.    பணவீக்கம்   12 வீதமாக குறைவடைந்துள்ளது.    இன்னும் சில வாரங்களில் அது ஒற்றை இலக்கத்துக்கு  செல்லும் என்று மத்திய வங்கி எதிர்வு கூறியிருக்கின்றது.   வட்டி வீத குறைப்பு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனை அனைவரும் எதிர்பார்க்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு...

2024-09-17 13:58:26
news-image

நம்பிக்கைக்கு எதிரான நம்பிக்கை 

2024-09-17 13:39:59
news-image

புவிசார் அரசியல் போட்டியில் எந்தவொரு சக்திக்கும்...

2024-09-17 12:56:52
news-image

நாட்டுக்கு சிறந்த ஜனாதிபதியை தெரிவுசெய்தல்

2024-09-17 08:26:10
news-image

ரணில் - சஜித்தை இணைக்க முயற்சித்தேன்; ...

2024-09-16 14:22:28
news-image

தெற்கின் ஆதரவுடன் சஜித் வடக்கு -  ...

2024-09-16 14:08:30
news-image

வடக்கு, கிழக்கு மக்களுக்கு நியாயமான தீர்வு...

2024-09-16 14:00:57
news-image

ஜனாதிபதித் தேர்தலும் இனவாதங்களும்

2024-09-16 11:13:33
news-image

தீர்க்கமான தருணம் மக்களே கவனம் !

2024-09-15 19:15:44
news-image

ரஷ்யாவின் சிவப்பு எல்லைக் கோடு?

2024-09-15 18:55:31
news-image

கானல் நீராகும் யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்

2024-09-15 18:48:52
news-image

ஜனாதிபதித் தேர்தலில் மாற்றம் வேண்டுமா, வேண்டாமா?

2024-09-15 18:47:46